என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த ஆண்டு டிச.23-ந்தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
    • ஏன் ஞானசேகரனை விடுதலை செய்தார்கள்?

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்வழக்கில் யார் அந்த சார்? என்றும் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.

    யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு?

    சில விடைகளும், பல கேள்விகளும்! எனக்கூறியுள்ளார்.

    மேலும், வீடியோவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு டிச.23-ந்தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். டிச.24-ந்தேதி ஞானசேகரனை கோட்டூர் போலீசார் கைது செய்கின்றனர். அதன்பின் விடுதலை செய்கின்றனர். மறுநாள் 25-ந்தேதி மாலை ஞானசேகரனை மீண்டும் கைது செய்கின்றனர்.

    இதை உங்கள் முன்னால் வைக்கிறேன்.

    ஏன் ஞானசேகரனை விடுதலை செய்தார்கள்? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? எதற்காக திமுக-வில் சில தலைவர்களுக்கு பதட்டம்? சாட்சிகளை அழிப்பதற்கான வாய்ப்பு இருக்கு என்றார். 

    • கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
    • கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் கலைஞர் உருவம் வடிவமைக்கப்பட்டு அதன் கீழ் செம்மொழி நாள் என எழுதப்பட்டுள்ளது.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

    பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் கலைஞர் உருவம் வடிவமைக்கப்பட்டு, அதன் கீழ் செம்மொழி நாள் என எழுதப்பட்டு, பேனா வைக்கப்பட்டு இருந்தது.

    கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஒமைக்ரான் ஜே.என்-இன் மாறுபாடான எல்.எப்.7 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    ஒமைக்ரான் வைரசின் துணை வகை வைரசால் கொரோனா தொற்று வேகமாக பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒமைக்ரான் ஜே.என்-இன் மாறுபாடான எல்.எப்.7 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.

    இதனைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள்.
    • கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.

    மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 342 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50அடியை எட்டி உள்ளது.

    மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வழிகளான வடவாறு, செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

    இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 47.50 அடி கொள்ளளவை எட்டியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 650 மில்லியன் கன அடியாக சரிந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தின் காரணமாக ஏரியில் நீர் வரத்து 2 வாரங்களில் உயர்ந்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வார தொடக்க நாளான நேற்று காலையும், மாலையும் என இருவேளையும் தங்கம் விலை உயர்ந்தது.
    • கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் வார தொடக்க நாளான நேற்று காலையும், மாலையும் என இருவேளையும் தங்கம் விலை உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் கிராம் ரூ.9,060-க்கும் விற்பனையானது.

    இதையடுத்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480

    01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-06-2025- ஒரு கிராம் ரூ.111

    01-06-2025- ஒரு கிராம் ரூ.111

    31-05-2025- ஒரு கிராம் ரூ.111

    30-05-2025- ஒரு கிராம் ரூ.111

    29-05-2025- ஒரு கிராம் ரூ.111

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    • அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

    இதில், தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், உலக நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியதாவது:

    * ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல், சூடான விவாதங்கள் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம்.

    * பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்தியாவின் குரலாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தோம்.

    * ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

    * பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
    • விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

    இந்த நிலையில், த.வெ.க. சார்பில் நாளை 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இவ்விழா நடைபெற உள்ளது.

    இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

    • ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
    • தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே அமைந்துள்ளது மதகுபட்டி கிராமம். கடந்த சில மாதங்களாக மதகுபட்டி கிராமத்தில் அடிக்கடி ஆடுகள், கோழிகள் திருடு போவது தொடர்கதையாகி வந்தது. போதிய பாதுகாப்புடன் பட்டிகளில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தபோதும் இந்த திருட்டை தடுக்க முடியாமல் ஆடு வளர்ப்போர் தவித்து வந்தனர். நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஆடுகளை வளர்த்து வருவோருக்கு இந்த தொடர் திருட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தது.

    ஆடு திருடும் கும்பலை பிடிப்பதற்காக பாதிக்கப்பட் டவர்கள் இரவு நேரங்களில் கண்விழித்து கண்காணித்து வந்தபோதிலும் வேறு பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆடுகள் திருடு போய் வந்தன. அதேவேளையில் நள்ளிரவு நேரங்களில் மதகுபட்டி கிராமத்தில் வாகனங்கள் வந்து செல்வதை உறுதி செய்த பொதுமக்கள், ஆடு மற்றும் கோழிகளை திருடுவதில் யாரோ மர்ம நபர்கள் ஈடுபட்டு கைவரிசை காட்டி வருவதாக எண்ணினர். அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய பொதுமக்கள் ஆடு, கோழி வளர்ப்போரிடம் இதுகுறித்து பேசி தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் மதகுபட்டி கிராம மக்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். குறிப்பாக ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டிகள், கிடைகள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அருகாமையில் அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.

    நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அங்குள்ள சுப்பு என்பவரது தோப்பிற்குள் 2 வாலிபர்கள் புகுந்து உள்ளனர். சத்தம் கேட்டு சுதாரித்த அந்த பகுதியில் கண்காணிப்பில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பி ஒன்று கூடினர். இதைப்பார்த்த அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் விடாமல் துரத்தி சென்றதுடன், அவர்களை கல், கம்பு, கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஒருகட் டத்தில் ஓட முடியாமல் கீழே விழுந்து மயங்கினர். இதுகுறித்த தகவல் அறிந்த மதகுபட்டி போலீசார் நள்ளிரவில் சம்பவம் நடந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    மதகுபட்டி அருகேயுள்ள கல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் மணிகண்டன் (வயது 30), விக்னேஷ் என்ற சிவசங்கரன் (25). இதில் மணிகண்டன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். விக்னேஷ் கல்லம்பட்டி பகுதியில் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தினார். தாய், தந்தை இறந்துவிட்ட நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கோவையில் வேலை பார்க்கும் மணிகண்டன் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். அப்போது தனது தம்பியுடன் சேர்ந்து அந்த பகுதியில் நடைபெறும் சேவல் சண்டையிலும் பங்கேற்று வந்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடு, கோழிகளை திருடி விற்பதாக கிராம மக்கள் சந்தேகித்து உள்ளனர். அதேபோல் மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வரும் காளைகளையும் சகோதரர்கள் திருடி இருக்கலாம் என்றும் கருதினர்.

    இந்தநிலையில்தான் நேற்று நள்ளிரவில் மதகுபட்டிக்கு ஆடு திருட வந்ததாக கருதிய பொதுமக்கள் அவர்களை அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதகுபட்டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.
    • வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    சென்னை:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.

    மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று 3 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.
    • கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல்:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று 3 ஆயிரம் கனஅடியாகவும் வந்தது.

    இந்த நிலையில், கபினி அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு சுமார் 6000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ×