என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி

    • சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.

    மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 342 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50அடியை எட்டி உள்ளது.

    மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 1,465 மில்லியன் கன அடியில் அதன் முழு கொள்ளளவான 1,465 அடியை எட்டியது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வழிகளான வடவாறு, செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழியாக தொடர்ந்து நீர் வரத்து வந்து கொண்டிருந்தது.

    இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 47.50 அடி கொள்ளளவை எட்டியது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 650 மில்லியன் கன அடியாக சரிந்த நிலையில் தொடர்ந்து நீர் வரத்தின் காரணமாக ஏரியில் நீர் வரத்து 2 வாரங்களில் உயர்ந்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×