என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்:  கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
    X

    கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    Next Story
    ×