என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அ.தி.மு.க. கூட்டணி தமிழக மக்களை மேம்படுத்தும்.
- தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது.
நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற உரையாற்றினார். அப்போது அமித் ஷா பேசியதாவது:-
"தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன்.
மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசன் பா.ஜ.க.விற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். சி.பி.ராதாகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார்.
பிரதமர் மோடி தமிழ் மண்ணையும், மக்களையும் எப்போதும் உணர்ந்தவர். தமிழ் மண், மக்கள், மொழி மீது பற்று கொண்டவர். சோழர்களுக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி பா.ஜ.க. அழகு பார்த்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தவர் பிரதமர் மோடி. ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி உருவாக்கினார். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர், முதல்-அமைச்சர், மந்திரிகள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்க கூடாது. 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்-அமைச்சர், மந்திரிகளை பதவிநீக்கம் செய்யும் சட்டத்தை மு.க. ஸ்டாலின் எதிர்க்கிறார். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்புச் சட்டம் என பேசுகிறார். செந்தில் பாலாஜி சிறை சென்றாலும் பதவியில் நீடித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 18 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. 21 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது. பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தமிழக மக்களை மேம்படுத்தும். தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது.
டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என பல துறைகளில் தி.மு.க. அரசு ஊழல் செய்து வருகிறது. உதயநிதியை முதல்-அமைச்சராக்குவது தான் தி.மு.க. கூட்டணியின் ஒரே லட்சியம். சோனியா காந்திக்கு அவர் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதுதான் ஒரே லட்சியம். நான் சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- முதலமைச்சர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும்.
- எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் விஜய் குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில கருத்துக்களை கூறியுள்ளார்.
விஜய் குறித்து அண்ணாமலை கூறியதாவது:-
விஜய்யும், நாங்களும் சித்தாந்தத்தில் நேர் எதிராக உள்ளோம். விஜய் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசவில்லை. விஜய் தனது ரசிகர்களின் பட்டாளத்தை வாக்குகளால் மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.
எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார். எத்தனை பேருக்கு சீர் செய்தார்? எத்தனை சகோதரிகளுக்கு காசு வாங்காம டிக்கெட் கொடுத்தாரு?
முதலமைச்சர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும். 51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என கூறினால் விஜய் மனது வருத்தப்படாதா?
என அவர் கூறினார்.
- பாஜக பூத் கமிட்டி மாநாடு அமித் ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்றது.
- திமுக-வின் ஊழல் பட்டியலை அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
அமித் ஷா தலைமையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் நடைபெற்றது. மாநாட்டு மேடையில் அமித் ஷா முன்னிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன்னை பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா "தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், மணல் கொள்ளை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூட திமுக-வின் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும்" என்றார்.
- பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, கொடுத்த வாக்குறுதி என்னாச்சி.
- மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி. அந்த வாக்குறுதி என்னாச்சி.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மக்களுக்கு விரோதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று கூறி அவர்களை வீழ்த்தி ஆட்சி பீடத்தில் அமர அ.தி.மு.க. முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வும் கடந்த முறையை விட, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடவும், அ.தி.மு.க. கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும் உள்துறை மந்திரி அமித் ஷா புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இன்று முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி? என திமுக கொடுத்து நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறித்து கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக பேசியதாவது:-
தமிழுக்காக நாங்கள்தான் எல்லாம் செய்தோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நான் கேட்கிறேன். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சி. சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சி.
பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, கொடுத்த வாக்குறுதி என்னாச்சி.
மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி. அந்த வாக்குறுதி என்னாச்சி.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்விக்கடன் வழங்குவோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி.
தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவோம் என்றீர்களே ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி, வாக்குறு என்னாச்சி.
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்புவோம் என்றீர்களே, ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சி.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
- மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
- பூத் கமிட்டி மாநாட்டில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.
இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
பூத் கமிட்டி மாநாட்டில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவது பாஜகவின் கடமை.
எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழக அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார் அமித்ஷா.
- மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார்.
அங்கு, பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டு மேடைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார்.
இந்த மாநாட்டில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
- இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு.
- இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
- விமான நிலையம் செல்வோர் உடனடியாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.
சென்னை பல்லாவரம் அருகே இன்று காலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் சாலையில் வரிசை கட்டி நின்றன.
இதில், விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட ஏராளமான பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
பேருந்து விபத்தால் 3 கி.மீ தூரம் நெரிசல் ஏற்பட, விமான நிலையம் செல்வோர் உடனடியாக தாங்கள் புக் செய்த விமான நிறுவனங்களுக்கு தகவல் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை.
- யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள்.
மதுரையில் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. 25 வணிக வளாக கடைகள் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் அமைய பெற்றுள்ளது.
த.வெ.க. மாநாட்டுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை. இந்த சில்லித்தனமான வேலைகளை எந்த காலத்திலும் தி.மு.க. ஒருபோதும் செய்யாது. ஷேர் கொடுக்கக் கூடாது, வாய்க்கால் தோண்டுவது, இடையூறு செய்வது போன்ற பணிகளை தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட செய்ய மாட்டான். உண்மைக்கு மாறான செய்தியை சொல்லுகிறார்கள். யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள். தி.மு.க. இதுபோன்ற இடையூறுகளை ஒருபோதும் செய்யாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.
- தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது70). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி (65). குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவர்கள் குளித்தலை அருகே வை.புதூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 18-ந் தேதி கருணாநிதி மற்றும் அவரது மனைவி சாவித்திரி, இளைய மகள் அபர்ணா (40) ஆகிய மூன்று பேரும் குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் 3 பேரையும் கட்டிப் போட்டு 40 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கைப்பேசிகளை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த குளித்தலையை அடுத்த பரளியைச் சேர்ந்த பிரகாஷ் (36), ரெங்கநாதன்(36), பார்த்திபன் (27), ரவிசங்கர் (26), திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ஹரீஸ் (28), சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் (35), பால் பாண்டி (32), அஜய் (28), கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த முருகேஷ்(35) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
இவர்களில் பிரகாஷ் காவலராக பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது, தலைமறைவாக உள்ள மூன்று நபர்களை பிடித்த பிறகு பல்வேறு உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
நகை, பணம் குறித்து வீட்டில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளை அடித்துச் சென்ற மூன்று நபர்களை கைது செய்த பிறகுதான் தகவல் தெரியும் என கூறப்படுகிறது.
- அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர்.
- மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு மறுத்து வரும் திமுக அரசு, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.
உத்தரப்பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கண்டனமும், அறிவுரைகளும் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கூடியவை.
பணியாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் சுரண்டக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேலை வழங்கும் விஷயத்தில் அரசுகள் வெறும் சந்தைப் பங்கேற்பாளர்கள் அல்ல; மாறாக, அவை அரசியல் சட்டப்படியான வேலை வழங்கும் அமைப்புகள். அரசு அலுவலகங்களில் அடிப்படையான பணிகளை தொடர்ந்து செய்யும் அவர்களின் முதுகில் அரசின் நிதிப்பற்றாக்குறை என்ற சுமையை சுமத்தக்கூடாது.
தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்த்து விட்டு, அவர்களிடமிருந்து நிரந்தரமான ஊழியர்களுக்கான வேலைகளை காலம் காலமாக பிழிந்தெடுப்பது பொது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதுடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதத்தையும் பாதிக்கிறது என்றும் அறிவுறுத்தினர். அந்த பணியாளர்கள் அனைவரையும் 2002-ஆம் ஆண்டு முதல் பணி நிலைப்பு செய்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.
தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தற்காலிக நியமனங்களை மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை &அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.
தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும், அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையும் தான் திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் விஷயத்தில் அரசுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை படித்தாவது திமுக அரசு தெரிந்து கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.
அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வருகின்ற 25-ந்தேதி வாக்கில், ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 24 -ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






