search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy traffic jam"

    • ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கா னவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த வர்கள் குடும்பத்து டன் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

    இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்ட மக்கள் நேற்று இரவே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் இரவு வரை ஈரோடு மாநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    குறிப்பாக ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலை மோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்க த்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் மதுரை, நெல்லை செல்லும் பஸ் நிலையங்ளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்தி னருடன் பஸ் நிலைய ங்களில் பொது மக்கள் வந்திருந்தனர்.

    இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. அனைத்து ெரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டா போட்டி போட்டனர்.

    குறிப்பாக கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் கட்டு க்கடங்காமல் இருந்தது.

    இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஈரோடு மேட்டூர் ரோடு, காளை மாட்டுசிலை, ஸ்வஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதேபோல் பல்வேறு வெளி மாவட்டங்களில் பணி புரியும் ஈரோட்டை சேர்ந்த வர்களும் தொடர் விடுமுறை காரணமாக ஈரோட்டிற்கு தங்களது குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர்.

    இன்று காலையும் ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    • வாகன ஓட்டிகள் திணறினர்.
    • கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    கோவை,

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

    இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் ஒப்பணக்கார வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சாலையோரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு ஜவுளி வாங்க செல்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் மறுநாள் தீபாவளி என்பதாலும் மக்கள் கூட்டம் மேலும் அதிகமாக காணப்பட்டு வருகிறது.போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

    கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது போலீசார் நின்று பைனாகுலர் மூலம் பொதுமக்கள் கூட்டத்தை காண்காணித்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சந்தேகப்படும்படியான ஆசாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் போலீசார் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவுறுத்தி வருகின்றனா். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை பிடிப்பதற்காக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சீருடையின்றி சாதாரண உடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையம் முன்புறம் சாலை தோண்டப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் மாற்றுபாதையில் அனுப்பப்படுகிறது.

    வடகோவை சிந்தாமணி ரோட்டில் வலது புரம் திரும்பும் சாலையில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் கிராஸ்கட் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் புருக்பாண்டு ரோடு வலதுபுரம் திரும்பும் சாலையும் அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வாகனஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டி உள்ளது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் திணறடித்து வருகின்றனர். கோவை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்

    • நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலா தலங்களை நவீனமாக அழகு படுத்துதல் போன்ற திட்டங்களை நகராட்சி உருவாக்கி வருகின்றனர்.
    • பிரதான நெடுஞ்சாலையில் காய்கறி கடைகளை அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலை களிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    கொடைக்கானல்:

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஏரிச்சாலையை அழகுறச் செய்யும் நோக்கில் விரிவான திட்டம், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை சிரமம் இல்லாமல் பார்க்கிங் செய்வதற்கு ஏற்ற வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஏனைய நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலா தலங்களை நவீனமாக அழகு படுத்துதல் போன்ற திட்டங்களை நகராட்சி உருவாக்கி வருகின்றனர்.

    நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தும் வகையில் கனரக வாகனங்களை நிறுத்துவது, பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது, பிரதான சாலைகளிலேயே மணல், ஜல்லி, செங்கல் என அடுக்கி வைத்து வியாபாரம் செய்வது என கொடைக்கானல் நகரே சீர் கெட்டு வருகிறது.

    ஜல்லிகற்கள் சாலையின் நடுவே சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து காயம் அடைவதோடு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மூஞ்சிக்கல் பகுதி வளைவுச்சாலையில் கனரக வாகனங்களை காலை மாலை வேளைகளில் நிறுத்தி வைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தங்கும் விடுதி வைத்திருப்போர் கார் பார்க்கிங் வசதியை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போல் வணிக ரீதியிலான கனரக வாகனங்கள் வைத்திருப்போர் அதற்கான வாகன நிறத்தும் இடங்களையும் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டும்.

    மூஞ்சிக்கல் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் வளைவு சாலையில் காலை மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்வதில் கடும் இன்னல் ஏற்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்பது அன்றாட நிகழ்வாக உள்ளது.

    மேலும் பிரதான நெடுஞ்சாலையில் காய்கறி கடைகளை அமைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் நெடுஞ்சாலைகளிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு ள்ளது.

    ஆனால் விதி மீறி சிலர் ஆக்கிரமிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினர் இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×