என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Workers Union"

    • இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு.
    • இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு.

    நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேலும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • ஆர்ப்பாட்டம் குறித்த கோரிக்கை மனு திட்ட அலுவலரிடம் வழங்கப்பட்டது.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    உடுமலை:

    உடுமலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சியில் கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தில் மாதம் முழுவதும் வேலை வழங்கக்கோரி உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டம் குறித்த கோரிக்கை மனு திட்ட அலுவலரிடம் வழங்கப்பட்டது .விவசாயிகள் தொழிலாளர் சங்க செயலாளர் ரங்கராஜ் தலைமையில் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ், ஜனநாயக வாலிபர் சங்கம் கமிட்டி உறுப்பினர் மாசாணி, சிஐடியு ரமேஷ், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படுவதை கண்டித்தும் மாதம் முழுவதும் வேலை வழங்கக் கோரியும் அதற்கான திட்டங்களை விரைவில் செயல்படுத்த கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×