என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கரூர் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்தது.
- இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்துசெய்யுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.
- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அதில், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது என புள்ளி விவரங்களோடு அவர் பேச ஆரம்பித்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
- முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார்.
சேலம்:
ரஞ்சி கோப்பை தொடரில் நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாடு அணி 22 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சேலத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் 10 ரன்னிலும், பிரதோஷ் பால் 20 ரன்னிலும், ஜெகதீசன் 22 ரன்னிலும், முகமது அலி 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்னும், விஜய் சங்கர் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- முன்னாள் வட்டார தலைவர் சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மார்த்தாண்டம் சந்திப்பு பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயோ கழிப்பறை உபயோகிக்க முடியாமல் இருப்பதை மக்கள் சுட்டி காட்ட உடனடியாக குழித்துறை நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தின குமார், முன்னாள் வட்டார தலைவர் சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது.
- பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தானே புயல் காரணமாக 30 நாட்கள் வரை பொதுமக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய அரசு அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டமான கடலூர் மாவட்டத்தின் தலைநகர் கடலூருக்கு புதை வழி மின்சாரம் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் நகரின் ஒரு பகுதியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதைவட கேபிள் பணிகளுக்கான பியூஸ் கேரியர்கள் ஆங்காங்கே உள்ள பில்லர் பாக்ஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கடலூர் மஞ்சக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை மின்சாரம் தடைபட்டது. மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்றிருந்த அப்பகுதியினர், விடிந்த பிறகும் மின்சாரம் வராததால் மின் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர்கள் வந்து பார்த்த போது பில்லர் பாக்ஸ்களிலிருந்து பியூஸ் கேரியர்களை காணவில்லை. இது தொடர்பாக அவர்கள் கடலூர் புதுநகர் போலீசாரிடம் புகாரளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட பியூஸ் கேரியர் ஒன்று ரூ.900 என்பதால் இதனை அவர்கள் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது.
- அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலுவின் சிறப்பான சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பண்ருட்டி டி.எஸ்.பி. பழனி ஆகியோர் உத்தரவின்படி பண்ருட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பண்ருட்டி குற்ற பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், திருவதிகை பாவாடை பிள்ளை நகராட்சி உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் விஷ்வா என்ற மாணவனுக்கு சிகை அலங்காரம் செய்து, அவனுக்கு நல்ல பல ஆலோசனைகளை கூறி படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலுவின் சிறப்பான சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.
- கனவுகளை உருவாக்குவது சென்னையின் சொந்த பையன் அஸ்வின்ராவ்.
- ஒவ்வொரு திருப்பத்திலும், அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய வீரர் அஸ்வினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சாதனைகளை முறியடித்து, கனவுகளை உருவாக்குவது சென்னையின் சொந்த பையன் அஸ்வின்!
ஒவ்வொரு திருப்பத்திலும், அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறார். இது ஒரு உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாகப் பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள்.
எங்கள் சொந்த ஜாம்பவான்களுக்கு அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் இதோ!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
- தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டிடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்துவிட்டார். அதற்காக அவர் கூறிய காரணம், இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது தான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். பெருவெளியின் தேவை 15 நாட்களுக்கு முன்பு கூட நிரூபிக்கப்பட்ட நிலையில், அதை உணராமல் அங்கு பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. அடிக்கல் நாட்டுவதை அரசு ஒத்தி வைக்க வேண்டும்.
அதற்கு மாறாக, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
- உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
தஞ்சாவூர்:
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை கண்டித்து இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், சாமி கரிகாலன், துரை ரமேசு, தமிழ் தேசிய பேரியக்கம் வைகறை, பழ. ராசேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன், விவசாயிகள் சங்கம் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
அப்போது மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
காவிரியில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தன்னிச்சை தொடரும்.
அதற்கான ஆரம்ப போராட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
- தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
- சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
- சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வரும் 19-ந்தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது.
பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 19-ந்தேதி முதல் பொது பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படுகிறது.
மெட்ரோ பயணிகள் தங்களின் 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







