search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baba indrajith"

    • முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார்.

    சேலம்:

    ரஞ்சி கோப்பை தொடரில் நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாடு அணி 22 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சேலத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் 10 ரன்னிலும், பிரதோஷ் பால் 20 ரன்னிலும், ஜெகதீசன் 22 ரன்னிலும், முகமது அலி 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ளது.

    முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்னும், விஜய் சங்கர் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதல் அரையிறுதியில் தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். இவர் இந்த போட்டியில் காயத்துடன் விளையாடியுள்ளார். கழிவறையில் தவறி விழுந்ததால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாயில் பிளாஸ்திரி போட்டு விளையாடினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை எதிர் கொள்கிறது. #RanjiTrophy2018
    ரஞ்சி டிராபி

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை எதிர் கொள்கிறது. வருகிற 1-ந்தேதி திண்டுக்கல்லில் இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணி விவரம் :-

    பாபா இந்திரஜித் (கேப்டன்), கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த், முரளிவிஜய், விஜய் சங்கர், பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், ரகீல்ஷா, எம்.முகமது, கவுசிக், அபிஷேக் தன்வார். #RanjiTrophy2018
    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy #BabaIndrajith #RanjiCaptain
    சென்னை:

    2018-2019-ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, நவம்பர் 1-ம் தேதி தனது முதல் போட்டியில் மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. பி பிரிவில் டெல்லி, பஞ்சாப், பெங்கால் ஆகிய அணிகளும் உள்ளன.

    இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த சரத் தலைமையிலான சீனியர் தேர்வு குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கடந்த  சீசனில் அபினவ் முகுந்த் கேப்டனாக செயல்பட்டால். இந்த சீசனில் அவருக்குப் பதிலாக இந்திரஜித் கேப்டனாக தேர்வாகி உள்ளார். ரஞ்சி டிராபிக்காக தமிழக அணி நாளை அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திரஜித், 42 முதல்  தர போட்டிகளில் 2662 ரன்கள் குவித்துள்ளார். 7 முறை சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 200 ரன்கள் எடுத்துள்ளார். #RanjiTrophy #BabaIndrajith #RanjiCaptain
    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார். #TNPL #TNPL2018 #DDvRTW
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார்.

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது, திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. பரப்பான இந்த ஆட்டத்தில் திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து திருச்சி வாரியர்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    173 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் சிறந்த ஸ்கோர் தான். இதனால் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் 87 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து விட்டோம்.

    எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதும் தெரியும். ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு வந்தவுடன் தோல்வியின் எல்லையை குறைக்க முடியும் என்று நினைத்தோம்.

    கடைசி 5 முதல் 6 ஓவரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எல்லாம் நல்ல படியாக அமைந்ததால் வெற்றி பெற்றோம். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

    சுரேஷ் குமார் நீண்ட காலமாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் தான் வீரர்கள் ஏலத்தில் அவரை விரைவிலேயே எடுத்தோம். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து திண்டுக்கல் அணி வீரர் ஹரி நிஷாந்த் கூறும் போது 172 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். எங்களது பீல்டிங் தரத்தை மேம்படுத்த வேண்டும்“ என்றார்.

    இன்று ஒய்வு நாளாகும். நாளைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL #TNPL2018 #DDvRTW
    ×