search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத் திறனாளிகள்"

    • மகாவிஷ்ணுவின் மூடநம்பிக்கை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்ச்சிகளும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது என்று வழக்கு தொடரப்பட்டது
    • இந்த வழக்கு இன்று[ஜூலை 8] உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    சினிமா உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகளை சித்தரிப்பதற்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள ஆங் மிச்சோலி [Aankh Micholi] என்ற படத்தில் மாற்றுத் திறனாளிகளை தவறாக சித்தரித்து அவர்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்ச்சிகளும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் நிபுன் மல்ஹோத்ரா என்று சமூக நல ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று[ஜூலை 8] உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்  தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சி ஊடகங்களிலும் சினிமாவிலும் தவறான சமூகப் புரிதலுக்கு வழிவகுக்கும் வகையில் மற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலான 'ஊனம்' முதலான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

    அவர்கள் படும் சிரமங்களை மட்டுமே காட்சிப் படுத்தாமல், அவர்களின் முன்னேற்றம், திறமைகள், சமூகத்துக்கு அவர்கள் அளிக்கும் பங்கு ஆகியவற்றையும்  காட்சிப் படுத்தவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பான  விஷயங்களை சென்சார் வாரியம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.
    • மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று திங்கட் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத்தி லிருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்த நிலையில் மாற்று திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாற்றத்திறனாளிகள் திரண்டு இருந்தனர். பின்னர் மாற்றுத் திறனாளிகள் நிலம் மற்றும் மனை வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு இலவசமாக செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தின் மூலம் விண்ணப் பிக்கப்படும் வங்கி கடன் மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

    மாற்று திறனாளி கள் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சித் துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமும் எழுப்பி னார்கள். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    • தினசரி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல் வோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
    • 5 பார்வைக் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் புதுப்பித்து வழங்கும் முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கும், இதர அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிறுவனத்திற்கு செல்வதற்கும், பணிபுரிவோருக்கு பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கும், தினசரி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்வோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற முகாமில் 260 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்து வழங் கப்பட்டுள்ளது. மேலும், 5 பார்வைக் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இம்முகாமானது நாகர்கோவில் எஸ். எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தோவாளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 30-ந் தேதி கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 31-ந் தேதி விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்டப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மற்றும் ஏப்ரல் 1-ந் தேதி (சனிக்கிழமை) கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும் இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    இலவச பஸ் பயண அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத் திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலிருந்து பணிபுரிவ தற்கான அசல் சான்று, சுயதொழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்று. தினசரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக செல்வோர் மருத்துவ அலுவலரிடம் சிகிச்சை பெறும் அசல் சான்றுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகலுடன், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வருகை தந்து இலவச பஸ் பயணச்சலுகை அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பிரம்மநாயகம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×