என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர்.
- பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் பள்ளிகளில் நேரடியாக தேர்வு எழுதுகிறார்கள்.
பள்ளிகளில் படிக்காமல் பயிற்சி வகுப்பு மூலம் 21 ஆயிரத்து 875 தனித் தேர்வர்களும், சிறை கைதிகள் 125 பேரும் எழுதுகின்றனர்.
302 மையங்களில் நடைபெறும் பொதுத்தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வுக்கு முன்னதாக 9.30 மணிக்கு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டார்கள். 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது.
10.10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு அதனை மாணவர்கள் சரி பார்த்து படிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
10.15 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 1.15 மணி வரை நடடைபெறுகிறது.
தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. முதல் நாளான இன்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் வெளியேற்றப்படுவதோடு 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என கண்காணிக்க 3200 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் தீவிர மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு முறையாக தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் நடத்த அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தங்களின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் வாழ்த்தும், ஆசிகளையும் பெற்றனர். அரசு மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் வெளிநபர்கள் யாரையும் தேர்வு நேரத்தில் அனுமதிக்கவில்லை. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பினர்.
சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இத்தேர்வு வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5-ந்தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி விடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்விற்கு எளிதாக ஆயத்தமாக முடியும்.
- அ.தி.மு.க. பலமாக இருப்பதால் தான் பா.ஜ.க. நம்மை தேடுகிறது.
- தி.மு.க. கூட்டணியில் 2 கட்சிகள் அதிருப்தியில் உள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், அதனை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 4-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெருமாள், சின்னப்பன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இன்னும் 10 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிமிடம் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க. தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர். அ.தி.மு.க. பலமாக இருப்பதால் தான் பா.ஜ.க. நம்மை தேடுகிறது.

தி.மு.க. கூட்டணியில் 2 கட்சிகள் அதிருப்தியில் உள்ளது. தூத்துக்குடி தொகுதியை பொருத்தவரை இந்த முறை அ.தி.மு.க. தான் களமிறங்குகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய வேட்பாளரை பொதுச்செயலாளர் தேர்வு செய்துவிட்டார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அ.தி.மு.க. தான் முழுகாரணம். நிலத்தினை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. தான். இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டதை மக்களிடம் தெரிவித்தால் போதும். மோடியை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் வாக்களிக்கமாட்டார்கள். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் 5 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
- தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலூர்:
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா. தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு பணிகளில் நேச பிரபா சுணக்கமாக செயல்பட்டதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அருள் ஒளி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரிய வந்தால் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதையும் மீறி நேச பிரபா சரிவர தேர்வு பணிகளில் ஈடுபடாததால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.
- கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம்:
சென்னையில் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 ஆயிரத்து 704 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.
இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக வருவாய்த்துறையில் நிலஎடுப்பு அதிகாரிகள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் மற்றும் கிராமமக்கள் பொன்னேரிக்கரையில் உள்ள நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 137 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆரம்பகட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. புதிய விமாநிலையத்தில் மொத்த திட்ட மதிப்பபான ரூ.32 ஆயிரத்து 704 கோடியில் பயணிகள் வசதிக்காக விமானமுனைய கட்டுமான பணிகள் மட்டும் ரூ.10 ஆயிரத்து 307 கோடி செலவிடப்பட இருக்கிறது.
விமான நிலையம் பிரமாண்டமாக 3 முனையங்களுடன் (டெர்மினல்) கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 4 கட்டமாக நடைபெற இருக்கின்றன.
இதில் முதல்கட்டிட கட்டுமான பணி 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற கட்டிடங்களின் பணிகள் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும்.
விமான நிலையத்தின் இறுதி கட்டுமான பணி 2046-ம்ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் அமைய உள்ளது.
இதில் முதல் முனையம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 758 சதுர மீட்டர், 2-வது முனையம்-4 லட்சத்து 76 ஆயிரத்து 915 சதுர மீட்டர், 3-வது முனையம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 495 சதுர மீட்டரிலும், சரக்கு முனையமும் அதற்கான வாகனங்கள் நிறுத்தும் இடம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 சதுர மீட்டரிலும் அமைய இருக்கிறது.
மேலும் பரந்தூர் விமான நிலையத்தில் 2 இணையான ஓடுபாதைகள் (4040X45 மீட்டர்) நீளத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் 26.54 சதவீதம் நீர்நிலைகள் உள்ள இடமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறார்கள்.
மேலும் புதிய விமானநிலையத்தை தற்போது உள்ள சென்னை-பெங்களூர் விரைவுச்சாலையுடன் இணைக்க புதிதாக 6 வழிச்சாலை அமைக்கவும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பரந்தூர் விமான நிலைய பணிக்கு ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. முழு வீச்சில் பணிகள் தொடங்குவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அவை முடிக்கப்பட்டதும் படிப்படியாக பணிகள் தொடங்கப்படும் என்றனர்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கும் பார் வெள்ளி ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,840-க்கும் சவரன் ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கும் பார் வெள்ளி ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மாதத்திற்கு இரண்டு முறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
- நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் ரூ.1,960.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1,960 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் ரூ.1,960.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதே போல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அன்புத்தோழர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசிலமைப்பின் கூறான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு ஊக்கமளிக்கிறது. முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என கூறியுள்ளார்.
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu pic.twitter.com/QKF8hyRI2M
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2024
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) March 1, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
- முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை.
திருச்சி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை ஆன இலங்கைத் தமிழர் சாந்தன் (வயது 55) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சிறை விடுவிப்புக்குப் பின்னர், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் அவர் உயிரிழந்தார் என கூறி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை திரும்பப் பெற்றார். முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று 3-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடிக்கிறது. முஜிபுர்ரகுமான் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.
அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை.
இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும்
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- போலீசார் தலைமை செயலகத்தில் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.
சென்னை:
சென்னையில் உள்ள தனியார் தொலைகாட்சிக்கு இன்று காலை 7.30 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் தலைமை செயலகத்தில் இன்று காலை 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சென்னை வானகரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) March 1, 2024
திரு @mkstalin அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
- தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.
அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும் பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உத வியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.






