என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.
- தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.
சென்னை
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடனேயே தங்கம் விலை இருந்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் ஒரு பவுன் தங்கம் ரூ.48 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை கடந்த மாதம் 5-ந் தேதி பதிவு செய்தது. அதற்கு பிறகு விலை அதிகரித்து, கடந்த 9-ந் தேதி ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தையும் கடந்தது.
அதனைத் தொடர்ந்து விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்பட்டது. இந்த விலை உயர்வால் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதற்கு மறுநாளே (29-ந் தேதி) பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரம் என்ற நிலையையும் ஒரே நாளில் தாண்டியது.
தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது. இப்படியே போனால், ஏழை, நடுத்தர மக்களுக்கு தங்கம் ஒரு கனவாக மாறிவிடுமோ? என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விலை இருந்தது. அதன் பின்னர் ஓரிரு நாட்கள் விலை குறைந்த நிலையில், கடந்த 1-ந் தேதி மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்தை தொடும் அளவுக்கு சென்றது. ஓரிரு நாட்களில் ரூ.52 ஆயிரத்தை தொட்டு விடும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து, ஆறுதலை தந்தது.
நேற்று ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனையாகிறது.
- 1,272 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதல்பாதை அமைப்பது, ரெயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வேயில் ரெயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்படு கின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம்-ஜோலார் பேட்டை, சென்னை சென்ட்ரல்- ரேணிகுண்டா என மொத்தம் 413.62 கி.மீ.தூரத்துக்கு ரெயில் பாதைகள் மேம்ப டுத்தப்பட்டு, இப்பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
1,272 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரெயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 170 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைந்துள்ளது.
தெற்கு ரெயில்வேயில் ரெயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் தண்டவா ளம் மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது. தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரெயில்களை இயக்க முடியும்.
- தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது.
- அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாப்பூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது. அதனை தகர்த்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்று வரலாற்றை வாசித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
40 தொகுதியிலும் நாம் மட்டுமே போட்டியில் உள்ளோம். போட்டியிட ஆள் இருக்கிறதா? என்று கேட்டவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லை.
அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன். தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா? என் முன்னாடி நீங்கள் ரொம்ப சாதாரணம். உங்களுக்கு பிரதமர் ஓட்டு கேட்டு வருவார். உள்துறை மந்திரி வருவார். எனக்கு எல்லாமே நான்தான். அப்ப நான்தானே கெத்து.
தமிழர்களுக்கு இந்த ஒரு நிலம்தான் உனக்கும் இருக்கு. அதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
- பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
சென்னை:
பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில்,
* பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
* 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
* ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.
* வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.
* போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
* பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
* பள்ளி வாகனங்களில் ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார்.
- காலை முதல் இரவு வரை சோதனை நடத்தப்பட்டதில் பணம் பறிமுதல்.
நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை திடீரென அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் 4.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் நாமக்கள் எஸ்பிஐ வங்கியில் ஒப்படைத்துள்ளனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சந்திரசேகரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.
- ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி.
நடப்பாண்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டிஎன்பிஎல் நடைபெறுகிறது.
நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.
சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது.
ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது.
- அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு இங்கு கிடையாது.
- தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம். குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.
அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.
ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.
ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு.
இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.
தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.
- இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க.வையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது; இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது இங்குதான்.
இந்த தேர்தல் களம், இரண்டாவது விடுதலைப் போராட்டம். இந்தியா என்ற அழகிய நாட்டை, அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயக போர்க்களத்தில் இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
ஜனநாயக போர்க்களத்தில் மனசாட்சியும் மக்களுமே என்றும் எஜமானர்கள். இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
பா.ஜ.க. ஆண்டதும் போதும்.. மக்கள் மாண்டதும் போதும். சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.
தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி.
அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் போய் கச்சத்தீவு பற்றி பேசும்போதே, பிரதமர் மோடி குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.
இது ஏப்ரல் மாதம்தான், மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும். ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு, ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடுதலையின் தொடக்கம்.
10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதுமாதிரி பதில் அளிப்பதற்காகவே, அவரை பிரதமர் மோடி மந்திரியாக வைத்திருக்கிறார்.
சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெளிநாட்டு வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதை திரும்ப செலுத்தப் போவது தமிழ்நாடு அரசுதான். ஆனால், நிர்மலா சீதாராமன் கணக்கு கேட்கிறார்.
மிக்ஜம் புயல், தென்மாவட்ட மழை வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கு மாநில அரசு நிதியைதான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காத நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியைப் போல வாயாலே வடை சுடுகிறார்.
மக்களை தப்பு கணக்கு போடாதீர்கள்; நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்தார்.
- வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
- டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம்.
ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 5ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் ஆன்லைனில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும்
- யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள்
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், "பாஜகவில் இணைந்தால் போதும், அவர்கள் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஆவியாகி விடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வழக்குகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு விட்டது.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டன. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்கிற செயலா இது? பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது.
பணம் மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார்கள். பாஜக அரசு நம்முடைய வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலத்துக்கு கொடுத்துள்ளார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அங்கு வளர்ச்சி ஏற்படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
- முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்த ரவி பச்சமுத்து, அங்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
- அப்போது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பாரிவேந்தர் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக முசிறி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டாக்டர் ரவி பச்சமுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் பெருமைமிக்க பிரதமராக வீற்றிருக்கும் மோடி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வென்று சாதனை படைப்பார் என திரண்டிருந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாங்கரைப்பேட்டையில் குழுமியிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பாரிவேந்தருக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பின், திருச்சி மாவட்டம் முசிறியின் பல்வேறு இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரிவேந்தர் மீண்டும் எம்.பி.யானால் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் பாதை, மகளிர் அரசு கல்லூரி, 1,500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்வார் என உறுதி அளித்தார்.
பாரிவேந்தர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் போட்டியிடுகிறார். டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்.பி.யாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் தேநீர் அருந்திய ரவி பச்சமுத்து, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபோது, முசிறியில் மகளிர் கலைக்கல்லூரி, காவிரி ஆற்றில் தடுப்பணை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தரவேண்டும் என மக்களும், விவசாயிகளும்கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், பாரிவேந்தர் 3 கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் உங்களுக்காக பணியாற்ற தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
- மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன
- மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்
மதுரை எம்.பி நிதி ₹17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ₹5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் கூறியதற்கு, ₹17 கோடியில் ₹16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்
அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,
"மதுரைத் தொகுதியில் அதிமுக கேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் சரவணன் அவர்கள் வாக்கு சேகரிப்பதற்கு உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலி பொருளாக மாற்றி விடுகின்றன. மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அவரிடமோ, அவர் சார்ந்த கட்சியிடமோ சொந்தத் திட்டங்கள் எதுவும் இல்லாதால் அவதூறுகளை நம்பி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
உண்மையில் தேர்தல் பிரச்சாரம் என்பது கருத்தியலும் களச் செயல்பாடும் முன்வைக்கப்படும் மேடைகள், அந்த மேடைகள் ஆரோக்கியமான விவாதமாக மாற்றுவதே பண்பட்ட அரசியல். தற்போது சரவணன் அவர்கள் ஒரு ஆங்கில் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வெங்கடேசன எம்.பி நிதிக்கான 17 கோடி ஒதுக்கீட்டில் 5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் 12 கோடியை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் பைனாகுலர் மூடியைத்தான் திறக்காமல் வீட்டுவிட்டதாய் செய்திகள் வெளிவந்தன. உண்மையில் அவர் தனது சொந்தக் கண்களைக் கூட திறக்க மறந்து விட்டாரா? என்ற கேள்வி எழுகிறது.
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்ட காலத்திலும் கூட களச் செயல்பாட்டினாலும், விரைவான தலையீடுகளினாலும் கோவிட் காலத்தில் மதுரை மக்களை காக்க செய்த பணிகளை அருகிருந்து பார்த்தவர் தான், அன்றைய திருப்பரங்குன்றத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அவர்கள்,
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மோபாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடி 10 கோடியே 98 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக 100 சதவீதம். ஓட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்துள்ளோம். எண்ணிக்கையில் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான்.
ஆனால் மரியாதைக்குரிய மருத்துவர் சரவணன் அவர்கள் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக சொல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். அரசு ராசாசி மருத்தவமனை பெருந்தொற்று நோய் சிகிச்சை, அனைத்து அரசு நூலகங்களிலும் மாணவர் போட்டித் தேர்வுக்காக நூல்கள், மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற உயர்மின் கோபுர விளக்குகள், இளைஞர்களுக்கான கபாடி மைதானங்கள் என இந்தியாவிற்கு முன்னுதாரணம் சொல்லும் பல பணிகளை செய்துள்ளோம்.
உண்மை இப்படி இருக்க 5 கோடி மட்டுமே செல்வழித்துள்ளோம். மீதப்பணந்தை செலவழிக்க வில்லை எனக்கூறுவது அவதூறுகளை தாண்டி வேறு எதுவும் ல்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல; ஆனால தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.






