என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
    • பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.

    இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 



    • நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன்.
    • தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன். இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இன்றைக்கு செயல்பட்டு வருகிறோம்.

    தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.வில் மட்டுமல்ல, அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை என்று தலையீடுகள் அ.தி.மு.க.வில் இருப்பது நாடறிந்த உண்மை.

    தன்னால் முடியாததை தன்னால் முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்றார். 

    • தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கோவை:

    காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை 3 பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவையில் நள்ளிரவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

    இந்த மாணவிக்கு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். முதலில் செல்போனில் நட்பாக பேசி வந்தஅவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். வார விடுமுறை நாட்களில் 2 பேரும் வெளியில் எங்காவது சென்று நேரத்தை செலவிட்டனர்.

    இதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று இரவு கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சந்தித்துக் கொண்டனர். காதலன், காரில் வந்திருந்தார். அந்த காரில் கல்லூரி மாணவி ஏறிக்கொள்ள கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மர்மநபர்கள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி காரை நோக்கி வந்தனர். காரின் கதவை தட்டி உள்ளே இருந்த 2 பேரையும் மிரட்டினர். இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபடியே காரில் இருந்த காதலனை வெளியே இழுத்தனர். கல்லூரி மாணவியின் கண் முன்பே அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த காதலன் மயங்கி விழுந்தார்.

    பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் மாணவியை, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கிச் சென்று 3 பேரும், மாணவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி இருக்கிறார். அவரையும் அந்த கும்பல் தாக்கி கொடூரச் செயலை அரங்கேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

    இதற்கிடையே மயக்கம் தெளிந்த காதலன், செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அர்ச்சுன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை அவர்கள் தேடினர். சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மாணவி, தண்டவாளம் அருகே உள்ள புதருக்குள் ஆடைகள் களைந்தநிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    காதலனை தாக்கி கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கும்பலை பிடிக்க போலீசார் வலைவிரித்தனர். இரவு விடிய, விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. அதேசமயம் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மட்டும் அந்த பகுதியில் கிடந்துள்ளது. அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரித்தபோது அது திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் யார், அவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. 3 பேரும் கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனிடையே, தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 168 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    01-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

    30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400

    29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-11-2025- ஒரு கிராம் ரூ.166

    01-11-2025- ஒரு கிராம் ரூ.166

    31-10-2025- ஒரு கிராம் ரூ.165

    30-10-2025- ஒரு கிராம் ரூ.165

    29-10-2025- ஒரு கிராம் ரூ.166

    • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • த.வெ.க. அலுவலகத்தில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் வேளையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் ஒரு குழு சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விஜய் பிரசார வாகனத்தை விரைவில் ஆய்வு செய்து, அதில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த வழக்கில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் பெயர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேர்த்துள்ளனர். விஜய்யின் பிரசார வாகன ஆய்வின்போது, த.வெ.க. அலுவலகத்தில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
    • சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 14-ந்தேதி முதல் ஜனவரி 16-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06111), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற நவம்பர் 15-ந்தேதியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06112) மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06113), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06114), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06119), மறுநாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06120), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 22-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06127), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி 23-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06128), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி 24-ந்தேதி வரையில் (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06117), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 25-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06118), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.
    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதையடுத்து ஓரிரு நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • மங்களபுரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா நகர் பீடரில் அருளானந்தநகர், பிலோ மினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர்நகர், பாத்திமாநகர், அன்புநகர், மேரீஸ் கார்னர் பீடரில் திருச்சி ரோடு, வ.உ.சி நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் பீடரில் கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர்,

    டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், ஹவுசிங் யூனிட் பீடரில் எஸ்இ ஆபிஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நிர்மலா நகர் பீடரில் புதிய வீட்டுவசதி வாரியம், எலிசா நகர், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், விபி கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர் பீடரில் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை யேசு கோவில், பிஷப் காம்ளக்ஸ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை.
    • மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று மாவட்ட பொறுப்பாளர்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    எஸ்ஐஆர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஐடி பிரிவு பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    நாகர்கோவில்:

    ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வடசேரி, வல்லன்குமாரவிளை துணை மின்நிலையங்களில் நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), தெங்கம்புதூர், ராஜாக்க மங்கலம் உபமின் நிலையங்களில் 5-ந்தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாகர்கோவில், பெரு விளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். ரோடு, கல்லூரி சாலை, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தடிக்காரன்கோணம், தேரேக்கால்புதூர், கோதைகிராமம், அப்டா, திரவியம் ஆஸ்பத்தரி பகுதி, சடையன்குளம், நாவல்காடு, எறும்புகாடு, தம்மத்துக்கோணம், இருளப்பபுரம், அனந்தநாடார்குடி, பட்டகசாலியன்விளை, கலை நகர், பொன்னப்ப நாடார் காலனி, குருசடி, என்.ஜி.ஓ. காலனி, குஞ்சன்விளை மற்றும் புன்னைநகர் ஆகிய பகுதிகளிலும்,

    5-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையர்புரம், புத்தளம், அளத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம்.
    • தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின்

    அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!

    ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.

    திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்!

    ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விஜய் பங்கேற்காதது குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR பற்றியும், அதன் விபரீதத்தை பற்றியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.

    தேர்தல் வரும் நிலையில், தேர்தல் ஆணையம் செய்யக்கூடிய SIR நடவடிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் விரோதமானது.

    குறுக்கு வழியில் வாக்குரிமைகளை பரிப்பதன் மூலம் குடியுரிமையற்றவர்களாக சிறுபான்மையினர்களையும் மற்றவர்களையும் உருவாக்கனும் என்பதுதான் அவர்களுடைய தொலைநோக்கு திட்டம்.

    அதற்கு நாம் எந்த விதத்திலம் இடம் கொடுத்துவிடக்கூடாது. சட்டரீதியாக அனைவரும் உச்சநீதிமன்றம் சென்று அவரவர்கள் தனிதனியாக வழக்கு போட வேண்டும்.

    அந்த மாதிரி நேரங்களில் திமுக சார்பிலான வழக்கறிஞர்கள் உதவி செய்வார்கள் என்கிற உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார்கள். SIR நடவடிக்கையால் ஏற்படும் விபரீதம் தொடர்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

    இதுபோன்ற மக்களின் முக்கியமான பிரச்சனைகள், மாநிலத்தில் மக்களுடைய வாக்குகள் பறிப்போகும் நிலை நம் கண் எதிரே தெரிகிறது.

    இதுபோன்ற கூட்டத்தில் விஜய் கலந்துக்காமல், பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பது அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது.

    பாஜக எந்தவிதமான திட்டத்தை கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×