என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகன், மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு உள்ளது: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்- செங்கோட்டையன்
- நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன்.
- தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வுக்காக கொள்கை உறுதியுடன் பணியாற்றி வருகிறேன். இந்த இயக்கம் வலுப்பெற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இன்றைக்கு செயல்பட்டு வருகிறோம்.
தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தி.மு.க.வில் மட்டுமல்ல, அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை என்று தலையீடுகள் அ.தி.மு.க.வில் இருப்பது நாடறிந்த உண்மை.
தன்னால் முடியாததை தன்னால் முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்றார்.






