என் மலர்
மகாராஷ்டிரா
- கலக்கத்தில் இருந்த ஒரு இந்து குடும்பத்திற்கு உதவி செய்து தங்கள் திருமண மேடையை பகிர்ந்து கொண்டனர்.
- இந்து திருமணம் அவர்களின் மரபுகளின்படி சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது.
இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதே மனிதர்களின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தும்.
இதற்கு உதாரணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திடீரென பெய்த கனமழையின் விளைவாக, மத நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில், ஒரு முஸ்லிம் குடும்பம் கலக்கத்தில் இருந்த ஒரு இந்து குடும்பத்திற்கு உதவி செய்து தங்கள் திருமண மேடையை பகிர்ந்து கொண்டனர்.
புனேவின் வான்வாடி பகுதியில் ஒரு விருந்து மண்டபத்தில் ஒரு முஸ்லிம் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பை நடத்திக் கொண்டிருந்தபோது, மற்றொரு இந்து குடும்பம் அதே முற்றத்தில் வெளியே தங்கள் பிள்ளைகள் திருமணத்துக்கு ஒரு விதானத்தை அமைத்திருந்தது.
மாலை 7 மணிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும், சூழ்நிலை திடீரென மாறியது. வானம் மேகமூட்டமாகி, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதன் விளைவாக, வெளியில் அமைக்கப்பட்டிருந்த விதானம் நனைந்தது. சுப நிகழ்வு தடைபட்டதால் இந்து குடும்பம் மற்றும் உறவினர்கள் கவலையடைந்தனர். மழை குறையுமா என்று சிறிது நேரம் காத்திருந்தும் எந்தப் பலனும் இல்லை.
இந்த கடினமான நேரத்தில், விருந்து மண்டபத்தில் தங்கள் திருமண வரவேற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களை இந்து குடும்ப உறுப்பினர்கள் அணுகினர்.
அவர்கள் தங்கள் இக்கட்டான நிலையை விளக்கி, திருமண விழாவை மண்டபத்தில் நடத்த அனுமதி கோரினர். முஸ்லிம் குடும்பத்தினர் அவர்களின் வேண்டுகோளுக்கு உடனடியாக இணங்கி, தங்கள் மேடையைப் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். கூடுதலாக, அவர்கள் மேடையில் இந்து திருமண சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவினார்கள்.
அவர்களின் ஒத்துழைப்புடன், இந்து திருமணம் அவர்களின் மரபுகளின்படி சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. பின்னர், இரு குடும்பத்தினரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர். புதுமணத் தம்பதிகள் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது, அங்கு இருந்தவர்களை மிகவும் கவர்ந்தது.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 73 ரன்னும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
திலக் வர்மா 27 ரன்னும், ரிக்கெல்டன் 25 ரன்னும், வில் ஜேக்ஸ் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி இரு ஓவரில் சூர்யகுமார், நனம் திர் ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
- கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
- 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த கல்யாண் மங்கலராகோ பகுதியில் சப்தசுருங்கி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் கட்டிடத்தைக் காலி செய்யுமாறு குடியிருப்புவாசிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் நேற்று மதியம் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை திடீரென இடிந்து கீழ்ப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் கீழ் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி நமஸ்வி (2), பெண்கள் பிரமிளா (56), சுனிதா (38), சுஷிலா (78), சுஜாதா (38) மற்றும் வெங்கட்(42) ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மருத்துவமனை தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் தாயார் ரீனாஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மால்வானி பகுதியை சேர்ந்தவர் ரீனாஷேக். தனது கணவரை பிரிந்த இவர் தனது 2½ வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ரீனாஷேக் தனது குழந்தையை மயங்கிய நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு மூச்சு திணறி மயங்கி விழுந்ததாகவும், அவர் டாக்டரிடம் கூறினார்.
சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. அப்போது குழந்தையின் அந்தரங்க பகுதியில் கடுமையான காயங்கள் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதில் மூச்சு திணறி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் தாயார் ரீனாஷேக்கை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது ரீனாஷேக்குக்கும் பர்கான் ஷேக் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பர்கான்ஷேக், ரீனாஷேக்கின் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் குழந்தை மூச்சு திணறி இறந்ததும் அம்பலமானது.
மேலும் தனது காதலனின் கொடூர செயலை ரீனாஷேக் வேடிக்கை பார்த்ததும், அவர் குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பர்கான்ஷேக், ரீனாஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
- உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மசோதாக்கள் மீது முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.
இதனால் கொந்தளித்த துணை ஜனாதிபதி தன்கர் உச்சநீதிமன்றம் சூப்பர் பாராளுமன்றம் போல செயல்படுகிறது என்றும் நீதித்துறை அதன் வரம்புக்குள் தான் இருக்க வேண்டும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "அரசியலமைப்பு மட்டுமே உயர்ந்தது என்றும், பாராளுமன்றம் அல்லது நிர்வாகக் குழு தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் போதெல்லாம் நீதித்துறை தலையிடும்" என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி14 கேள்விகளை எழுப்பினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பி.ஆர். கவாய் மீண்டும் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பேசிய பி.ஆர். கவாய், "நீதித்துறையோ, அரசாங்கமோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல. இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. 3 தூண்களும் அரசமைப்பின்படி நடக்க வேண்டியவை. அரசியலமைப்பைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பாராளுமன்றம் அடிப்படை அரசியலமைப்பு கட்டமைப்பைத் மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
- கனமழையால் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் வீடியோ வைரலானது.
- விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் பேசினார்.
மகாராஷ்டிராவில் மழைநீரில் அடித்து செல்லப்பட்ட விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயியின் மனதை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில், விவசாயி கௌரவ் பன்வார், கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்கடலைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்து தனது வெறும் கைகளால் அதை காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயத்தை உலுக்கியது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீணான விளைபொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
விவசாயியுடன் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.
- பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
- பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், "பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டது.
இந்நிலையில், துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான தனது ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே முறித்து கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஐஐடி பாம்பே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே நிறுத்தி வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.
- பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார்.
- பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத். இவரின் நரகத்தில் சொர்க்கம் (Narkatla Swarg) என்ற புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிடுகிறார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியை கிண்டல் செய்யும் வகையில் சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "அவர்கள் {சிவசேனா (UBT)} பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், நரகத்தில் விழுந்து இன்று சொர்க்கத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.
பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். குஜராத் மற்றும் தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பணியை பாலாசாகேப் அங்கீகரித்தார்.
தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, பாலாசாகேப்பின் கொள்கைகளைக் கைவிட்ட நபர்கள் (உத்தவ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல்), அவரது முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ({சிவசேனா (UBT)}) பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்." எனத் தெரிவித்தார்.
சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வரானார். பின்னர் சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கைப்பற்றினார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது.
- சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
- நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் 200.15 புள்ளிகள், நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,530.74 புள்ளியாக இருந்தது. இன்று காலை 82,392.63 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 82,146.95 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,514.81 புள்ளிகளிலும வர்த்தகமானது. இறுதியாக 200.15 புள்ளிகள் சரிந்து 82,330.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,062.10 புள்ளியாக இருந்தது. இன்று காலை 25,064.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,953.05 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 25,070.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
பாரதி ஏர்டெல் நிறுவன பங்கு இன்று 2.81 சதவீதம் சரிவை சந்தித்தது.
ஹெச்.சி.எல். டெக், எஸ்பிஐ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைட்டன் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
இந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டாட்டா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
ஆசிய மார்க்கெட்டுகளில் ஜப்பானின் Nikkei 225 index, ஷாங்காயின் SSE Composite index, ஹாங் காங்கின் Hang Seng பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. தென்கொரியாவின் Kospi, ஐரேப்பிய பங்குசு் சந்தைகள், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,200.18 புள்ளிகள் உயர்ந்து கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் 82,530.74 புள்ளிகளை தொட்டது. அதேபோல் நிஃப்டி 395.20 புள்ளிகள் உயர்ந்து 25,062.10 புள்ளிகளை தொட்டது.
- சாந்தா குரூஸ் ஓட்டல் அறையில் சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
- தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார்.
மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற 34 வயது நபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
சந்தியா ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற மற்ற ஆண்களுடன் பேசுவதும் வினோத் குமாருக்கு துண்டாக பிடிக்கவில்லை.
இதனால் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த வினோத் கடந்த 2019 அக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
ஆனால் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது ஆகிவற்றால் வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததை சாட்சியங்கள் வெளிப்படுத்தின.
இந்நிலையில் நேற்று விசாரணை நிறைவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
- டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டது.
அமெரிக்கா மற்ற நாடுகள் மீது கடுமையாக வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டு வந்தது. பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதனால் பங்குச் சந்தை மெல்ல மெல்ல ஏற்றம் கண்டன.
கடந்த வாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதேவேளையில் அமெரிக்கா சீனா மீது விதித்த கடுமையான பரஸ்பர வரியை வெகுவாக குறைத்துள்ளது. இவற்றுடன் வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டார்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால் இன்று மதியத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக அளவு ஏற்றம் காணப்பட்டது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 395.20 புள்ளிகளும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,330.56 புள்ளிகளாக இருந்து. இன்று காலை 81,354.43 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்த பட்சமாக 80,762.16 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,718.14 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,200.18 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,666.90 புள்ளியாக இருந்தது. இன்று காலை 24,694.45 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்த பட்சமாக 24,494.45 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 25,116.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 395.20 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 25,062.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 30 நிறுவன பங்குகளை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 29 நிறுவன பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.
இந்தூஸ்இந்த் வங்கி பங்கு மட்டும் சரிவை சந்தித்தது.
- பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தானது.
- ஒரு அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாக முன்வந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி(எஸ்.பி.) தலைவர் சரத் பவார் சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, சிம்லா ஒப்பந்தம் (1972 இந்தோ - பாக் போர் நிறுத்த ஒப்பந்தம்) அப்போதைய பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மூன்றாம் தரப்பு தலையீட்டை தெளிவாக நிராகரித்தது. ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.
பிறகு ஏன் மற்றவர்கள் தலையிட வேண்டும்?. இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன் அனுமதிக்கப்பட்டது? இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். ஒரு அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாக முன்வந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இது சரியான அணுகுமுறை அல்ல" என்று தெரிவித்தார்.
மேலும் ராணுவ தாக்குதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அனைத்து தகவல்களையும் ஊடகங்களில் வெளியிட முடியாது. சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை விட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது சிறந்தது என்பதே என் கருத்து" என்று தெரிவித்தார்.






