டிரம்பின் வரி விதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அதரவு அளிக்க வேண்டும்: சரத் பவார் சொல்கிறார்

இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும்.இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
டிரம்பின் வரி விதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு அதரவு அளிக்க வேண்டும்: சரத் பவார் சொல்கிறார்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நெருக்கடி உத்தியை இந்தியா அரசுக்கு எதிராக பயன்படுத்துகிறார். டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில மூத்த அரசியல் கட்சி தலைவரும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சி தலைவருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும். இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அமெரிக்க அதிபராக முதல்முறை பணியாற்றிய டிரம்பின் பணி முறையை நாம் பார்த்திருக்கிறோம். அவரை கட்டுப்படுத்த யாரும் இல்லை என நான் உணர்கிறேன். அவர் தனது மனதில் தோன்றுவதை உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார்.

நம் நாட்டிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டு வரும் விரிசலை பிரதமர் மோடி புறந்தள்ளி விடக்கூடாது. இன்று பாகிஸ்தான் நமக்கு எதிராக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் கூட நம்முடைய மகிழ்சியாக இல்லை.

நம்முடைய அண்டை நாடுகள் நம்மை விட்டு வலகிச் சென்று கொண்டிருக்கின்றன. உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சரத் பவார் தெரவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com