என் மலர்
குஜராத்
- குஜராத்தில் கேளிக்கை கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் கேம்ஜோன் உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர்.
இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
#WATCH | Gujarat: A massive fire breaks out at the TRP game zone in Rajkot. Fire tenders on the spot. Further details awaited. pic.twitter.com/f4AJq8jzxX
— ANI (@ANI) May 25, 2024
- திடீர் உடல்நலக் குறைவால் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என அவரது மேனேஜர் தெரிவித்தார்.
அகமதாபாத்:
குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 போட்டியைக் காண பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் சென்றார்.
போட்டி முடிந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இதற்கிடையே, நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது மேனேஜர் பூஜா தத்லானி, ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி என்றார்.
இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
- அகமதாபாத் சென்ற ஷாருக் கான் கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
- அதன்பின் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அகமதாபாத்:
பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று முன்தினம் மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என அவரது மேனேஜர் பூஜா தத்லானி தெரிவித்துள்ளார். மேலும், ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Pooja Dadlani, manager of actor Shah Rukh Khan says, "...He is doing well..."
— ANI (@ANI) May 23, 2024
Actor Shah Rukh Khan was admitted to KD Hospital in Ahmedabad, Gujarat yesterday due to heat stroke and dehydration. https://t.co/YKeELW0t9b pic.twitter.com/o40nbML3fA
- எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கிடையே, விராட் கோலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஷாருக் கான் நேரடியாகச் சென்று கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
- ஹீட் ஸ்ட்ரோக்கால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அகமதாபாத்:
பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியது.
- ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
- விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
- பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
- குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் குவாலிபையர்-1ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்டாகி டக் அவுட்டானார்.
நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டி இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்று ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்த நரேந்திர மோடி மைதானத்தில் அன்று 137 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் இன்று டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
- குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது.
- கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை.
அகமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 4 பேரை குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
- ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார்.
- ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
5 ரூபாய்க்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள், ஆனால் அது ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கணினி ஆபரேட்டரை சிறையில் அடைத்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு வருவாய் ஆவணங்களை வழங்க ரூ.5 லஞ்சம் வாங்கியதாக நவீன்சந்திர நகும் என்பவதை லஞ்ச தடுப்புத் துறை கைது செய்துள்ளது.
46 வயதான நகும், 2013ம் ஆண்டு முதல் கிராமத்தில் கணினி தொழில்முனைவோராக (VCE) இரண்டு மணி நேரம் மட்டும் பணியாற்றி வந்தார்.
பொதுவாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ. 5 பெறுவதாகவும், இதில், ரூ. 3 நகுமிற்கும் ரூ. 2 அரசாங்கத்திற்கும் கொடுக்கப்படுகிறது.
ஆனால், நகும் ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச தடுப்பு துறையினர் நகுமை கைது செய்துள்ளனர்.
மேலும், நகும் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் ஏசிபி குஜராத் இயக்குனரான ஷம்ஷேர் சிங் கூறறுகையில், "லஞ்சத் தொகை சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்றார்.
- அகமதாபாத் நகரில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக சந்திரகாந்த் வல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
- இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக சந்திரகாந்த் வல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டடி பள்ளத்தாக்கில் 620 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இனிமேல் அந்த மரங்கள் வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பல சட்டவிரோத கட்டிடங்கள் கட்டுப்பட்டு வருவதாகவும், அதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஜடானி கிராமத்தில் உள்ள மக்களிடம் இங்குள்ள வீடுகளை அரசு விரைவில் கையகப்படுத்தும் என்று அந்த கிராமத்தை வாங்கியுள்ள ஜி.எஸ்.டி. தலைமை ஆணையர் கூறியதாக சமூக ஆர்வலர் சுஷாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
- குஜராத் போர்டு 10ம் வகுப்பு முடிவில் 99.72% மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
- டாக்டராவதே லட்சியம் என பூனம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளரின் மகள் பூனம் குஷ்வாஹா, குஜராத் வாரிய 10ம் வகுப்புத் தேர்வில் 99.72% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளரின் மகள் பூனம் குஷ்வாஹா, நேற்று முன்தினம் குஜராத் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம் (GSEB) வெளியிட்ட குஜராத் போர்டு 10ம் வகுப்பு முடிவில் 99.72% மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
பூனத்தின் தந்தை பிரகாஷ் குஷ்வாஹா கடந்த 25 ஆண்டுகளாக வதோதராவில் பானிபூரி விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். பூனம் தன் தந்தைக்கு வியாபாரத்திலும், தாய்க்கு வீட்டு வேலைகளிலும் பல வருடங்களாக உதவி வந்திருக்கிறார். இருப்பினும், அவர் எந்த நிலையில், தன்னுடைய படிப்பை சமப்படுத்த தவறியதில்லை.
பூனம் தன் தந்தையின் பானிபூரி வண்டியை பல ஊர்களிலும் கொண்டு சென்று வியாபாரம், கூடுதல் வேலைகள் மற்றும் நிதி சவால்களை எதிர்கொண்ட போதிலும், பூனமிற்கு படிப்பின் மீதான அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையவில்லை.
மருத்துவப் பணியை தொடர வேண்டும் என்ற கனவுகளுடன், பூனம் டாக்டராவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
பூனத்தின் இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உத்வேகமாகவும், சவால்களை சமாளித்து கல்வியில் புதிய உயரங்களை எட்டுவதில், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.






