என் மலர்
இந்தியா
- பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
புதுடெல்லி:
பீகாரின் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதற்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என தேஜஸ்வி யாதவ் ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிவித்தார். ஆனால் தேஜஸ்வி பெயர் பட்டியலில் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்தார். இருப்பினும் 2 அடையாள அட்டைகளை வழங்கியதாக ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், போலியான அரசாங்க ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்துவது குற்றம் என்றும், ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் போலியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேஜஸ்வி சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
- மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இந்நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியே மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சி. பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மாநிலங்களவையில் மத்திய மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமான அளித்துள்ள பதில் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
மன் கீ பாத் நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும்.
- சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும் என்றார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் பங்கேற்ற மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:
இந்தியா யாருக்கும் அடிபணியாது. கொரோனா நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐ.டி. துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.
சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும். இன்று இந்தியா வலுவானது, அதிக மரியாதைக்குரியது. நாடு புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உள்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. வர்த்தக ஒப்பந்தங்களையும் இறுதி செய்து வருகிறது என தெரிவித்தார்.
- அண்ணா, காமராஜர் போன்றோர் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள்.
- மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
விருதுநகர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசியதாவது:
விருதுநகர் மண், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண். இந்திய அளவில் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருந்தலைவர். இந்த மண்ணில் பேசுவது எனது பாக்கியம். அவர் எந்தக் கட்சி என்றாலும், நல்லது செய்தால் மக்களிடம் புகழ் நீடிக்கும். எம்ஜிஆர், அம்மா இன்றும் வாழ்வதற்குக் காரணம் மக்களுக்குச் சேவை செய்தார்கள்.
அண்ணா, காமராஜர் போன்றோர் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள். மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை திமுக எம்.பி. ஒருவர் அவதூறாகப் பேசியது கண்டனத்துக்குரியது. அதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கக் கூட இல்ல. அப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? தன்னலமற்ற தலைவர்கள் யாரையும் கொச்சைப்படுத்துவது சரியல்ல. திமுகவுக்கு அப்படிப்பட்ட பண்பு கிடையாது. அதனால் காற்றில் கரைவது போல திமுக கரையும்.
எம்ஜிஆர், அம்மா ஆட்சிக் காலத்திலும் புதிய கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். இந்த விருதுநகரிலும் 400 கோடி மதிப்பீட்டில் ஒன்று கொடுத்தோம். இந்திய வரலாறிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. இதைப் பெருமையோடு சொல்கிறோம். 50 மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரமுடியவில்லை. அதுக்குத் திறமை வேண்டும். திறமையில்லாத முதல்வர் ஆள்கிறார்.
67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 பொறியியல் சுல்லூரி, வேளாண்மை கல்லூரி என ஏராளமான கல்லூரிகளைத் திறந்தோம். அதனால், இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011ல் 100க்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்கள். இன்று நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை அதிமுக உருவாக்கிக் கொடுத்தது.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. திமுக அரசும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். எவ்வளவு முதலீடுகள் ஈர்த்தீர்கள், எவ்வளவு வேலைவாய்ப்பு என்று வெள்ளை அறிக்கை கேட்டும் கிடைக்கவில்லை.
விலைவாசி உயராமல் அதிமுக பார்த்துக்கொண்டது. எந்த மாநிலத்தில் விலை குறைவாக விற்கிறதோ, அங்கு வாங்கி இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்தோம். கொரோனா காலத்தில் கூட விலைவாசி ஏறாமல பார்த்துக்கொண்டோம். விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ரேஷன் கடையில் விலையில்லாமல் பொருட்கள் கொடுத்தோம்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றது திமுக, அதன் ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். எல்லாம் பொய். நீட் தேர்வை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று முதல்வர் கையை விரித்துவிட்டார். இதைத்தான் நாங்களும் குறிப்பிட்டோம். ஆனால் பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லி ஆட்சி அமைத்த பிறகு ரத்துசெய்ய முடியாது என்று பொய் சொல்லும் முதல்வர் தேவையா?
சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சகோதரர்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவலருக்கே இந்த நிலை என்றால் மக்கள் பாதுகாப்பை சிந்தித்துப் பாருங்கள். போதைக்கு அடிமையாகி என்ன செய்வதென்று தெரியாமல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது எவ்வளவு பெரிய கேவலம்.? இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? பலமுறை எச்சரிக்கை கொடுத்தேன். ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் விற்பனை செய்வதே திமுககாரர்கள். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினே இதை சொல்லிவிட்டார். கட்சிக்காரர் செய்வதை அவரே ஒப்புகொண்டார். நாங்கள் சொல்லலை, அவர் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல வீசி நகையை திருடிவிட்டுச் சென்றனர். பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். ஸ்டாலினைப் பொறுத்தவரை குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக கம்பெனி நடத்துகிறார். மக்களை பார்க்கவில்லை, குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். நாட்டு மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு தில்லு இல்லை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு தொழிற்சாலைக்கு கட்டணம் உயர்த்திவிட்டதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
விருதுநகரில் மண் வீடாக இருந்து காலியிடமான பகுதிக்கு சொத்து வரி 56-ல் இருந்து 1,107 ரூபாயாக உயர்த்திவிட்டனர். வீடு கட்ட அனுமதி வாங்க அதிமுக ஆட்சியில் 1000 சதுரடிக்கு 37,000 ரூபாயாக இருந்தது. இன்று 74,000 ரூபாய் கட்ட வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. எனவே இப்போது யாராலும் வீடு கட்ட முடியாது. அதனால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம், பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். விலையில்லா வேட்டி, சேலை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை, அதிமுக ஆட்சி அமைந்ததும் வேட்டி, சேலை கொடுக்கப்படும். அதேபோல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை கொடுப்போம். சந்தோஷமாகக் கொண்டாடலாம்.
உங்களுடன் ஸ்டாலின் என்று 46 பிரச்சனைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படியென்றால் கடந்த நான்காண்டுகள் என்ன செய்தீர்கள். இன்னும் 7 மாதத்தில் என்ன செய்வார்கள்? தேர்தல் வருவதால் நாடகம் ஆடுறார். இதேபோல் தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து ஏமாற்றினார். ஏற்கனவே போட்ட மனுக்கள் என்ன ஆனது? உங்கள் ஆசையைத் தூண்டி வாக்குகள் பெறுவதற்கு தந்திரமாக செயல்படுகிறார்.
விருதுநகர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெயில்வே சாலை கொடுத்தோம். கூட்டுக்குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டினோம், அதை திமுக செயல்படுத்தவில்லை. தார்சாலைகள், காமராஜருக்கு மணிமண்டபம், விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் கல்வி திருவிழா, சங்கரலிங்க நாடார் மணிமண்டபம் என பல திட்டங்கள் நிறைவேற்றினோம்
இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள். நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
- அறுந்த guitar string ஆல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காந்தர் என்ற ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு தனது வீட்டில் அறுந்த guitar string இல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
காந்தரின் தந்தை ஒரு இசைக் கலைஞர் ஆவார். அவரது தாயார் சவிதா ஒரு நாட்டுப்புறப் பாடகி. சம்பவம் நடந்தபோது சவிதா நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
தற்கொலைக் குறிப்பில், காந்தர், "அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள், நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
ஆனால் இன்று நான் வெளியேற வேண்டிய நேரம் இது. நீங்கள் என் கடிதத்தைப் படிக்கும் நேரத்தில், நான் சொர்க்கத்தில் இருப்பேன்" என்று தற்கொலைக் குறிப்பில் எழுதிவைத்தான்.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்தச் சிறுவன் பிரபலமான ஜப்பானிய Anime தொடரான 'Death Note' தொடரை மிகவும் விரும்பி, இந்த நிகழ்ச்சியின் ஒரு கதாபாத்திரத்தின் படத்தை தனது அறையில் வரைந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த தொடரின் தாக்கம் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டெத் நோட் கதையில், ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கு நரகத்திலிருந்து தவறுதலாக பூமியில் விழுந்த குறிப்பேடு கிடைக்கிறது. ஒருவரின் பெயரை மனதில் நினைத்துக்கொண்டு அதில் எழுதினால் அவர்கள் மரணிப்பார்கள்.
- இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல இருந்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார்.
டிரம்ப் உடனுடக்குடன் முடிவை மாற்றிக்கொள்பவர் என்பதால் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் பரிட்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக வெளியான செய்திகளை பொய்யானவை என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், "அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை.
பல்வேறு கொள்முதல் செயல்முறைகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
- அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
- தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
தீபக் சைனி தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.
அவ்வாறு, ஒரு சிறுமியின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்.
- ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்
தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடியதாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இதனையடுத்து, SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இ.பி.எஸ். வாய் திறக்காதது ஏன்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதம் ஓடிவிட்டது. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகிறார்கள். இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.
இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே... அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகின்றனர்..? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்..? அதிமுக பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாதென்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது. நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள்
உண்மையிலேயே தில்லு, திராணி, தெம்பு இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம் சென்னை மாநகராட்சியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 வாக்கு நீக்கப்பட்டது. நீதிமன்றம் நாடி, மாவட்டச் செயலாளர்கள் புகார் கொடுத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. போலி வாக்காளர்களை நீக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடி இப்போது நீக்கியிருக்கோம். ஒரு தொகுதியில் 27779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. திநகர் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சி தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது உண்மை, ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் பித்தலாட்டம்தானே? திமுக மக்களின் கட்சிக்காரர்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். அதனால் 2006 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால் அன்று ஒப்படைத்தவரை கைது செய்தார்கள். கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கட்சிக்கு கட்சி எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. அம்மா இருக்கும்போது சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது ஒன்றரை மணிநேரத்தில் 1200 ஓட்டுகளை பதிவுசெய்தார்கள் நீதிமன்றம் சென்றோம். ஒன்றரை மணிநேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடு தேர்தலை ரத்துசெய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு நடந்தது. திமுக அரசாங்கமே அந்த தேர்தலை ரத்து செய்துவிட்டது.
இன்று ஊழல் இல்லாத துறையே இல்லை. எதற்கெடுத்தாலும் பணம்தான். ஊழலில் ஸ்டாலின் அரசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு 5400 கோடி ஊழல் நடக்கிறது. மேலிடத்து உத்தரவு என்று சேல்ஸ்மேன் சொல்கிறார். இந்த நான்காண்டில் 22 ஆயிரம் கோடி ரூபாய் திமுக அரசு கொள்ளையடித்திருக்கிறது. 10 ரூபாய் மந்திரி செந்தில்பாலாஜி என்று மக்களே பெயர் வைத்துவிட்டனர்.
போதைப் பொருள் விற்பனை சுனஜோராக நடக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொன்னதை முதல்வர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை. 2022ம் ஆண்டு காவல்துறை மானியம் வந்தபோது, கொள்கை விளக்க குறிப்பில் 20வது பக்கத்தில், பள்ளி கல்லூரிக்கு அருகில் 23418 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் கைதுசெய்யப்பட்டது 148 பேர், மற்றவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள். அப்புறம் எப்படி கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்?
ஸ்டாலின் அவரது கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது. காலையில் கண்விழிக்கும்போது எங்க கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என்று பதறிப்போகிறேன் என்கிறார். அவருடைய கட்சிக்காரரையே கட்டுப்படுத்த முடியாதவர், நாட்டில் குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவார்..? பொம்மை முதல்வரை பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கிடையாது நான் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் 50 நிமிடம் பேசினேன். அப்போது அவர், இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள். நான் போய் பதிலுக்காக குறிப்பெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் பேச்சை நிறுத்திக்கொண்டேன்
இவ்வளவு நேரம் ஏன் பேசுகிறேன்? ஆட்சியில் நடக்கும் குறைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இன்றுவரை மக்கள் போராடுகிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டும்தான் கவனிப்பார்.
தமிழகத்தில் சூப்பர் முதல்வர் என்கிறார்கள். எதில் என்றால், கடன் வாங்குவதில் தான். இந்த ஐந்தாண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை உங்களிடம் தான் வசூல் செய்வார்கள். ஒருநாள் திமுக அரசு தமிழ்நாட்டையே கடன் வாங்கியதற்கு அடமானம் வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட காலம் வந்துவிடும்.
எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். ஆனால், அதற்காக அமைத்தார்களா.? கடன் வாங்குவதற்கே நிபுணர் குழு அமைத்தார்கள். பொருளாதார வளர்ச்சி 11.19% என்கிறார் புள்ளிவிவரம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த புள்ளி விவரத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போயிருந்தேன், பெண்களிடம் பேசினேன். இதற்கு என்னிடம் வீடியோ ஆதாரமே உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 700 800 ரூபாய் ஊதியம் கிடைத்தது, இந்த திமுக ஆட்சியில் 150 ரூபாய்தான் கிடைக்கிறது என்றார்கள். நீங்கள் புள்ளிவிவரம் சொல்கிறீகள் வெளியே வந்து நாட்டு மக்களைப் பாருங்கள் மக்கள் கஷ்டத்தை பார்த்து தெரிந்து பேசுங்கள் ஸ்டாலின்
அந்தக் காலத்தில் மன்னர் அமைச்சர்களைப் பார்த்து, 'நாடு எப்படி இருக்கிறது?' என்று கேட்பார் உடனே அவர்கள், "நாடு சுபிட்சமா இருக்கிறது. மும்மாரி மழை பெய்கிறது' என்று பொய் சொல்வார்கள். அப்படி சொல்வதையே நம் முதல்வர் நம்பிக்கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. விலை குறைப்பதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்தது..? இதே அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் அமைத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவுத்துறை மூலமாக எங்க விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தோம். அண்டை மாநிலத்தில் இருந்தும் கூட வாங்கி வந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்தோம். அப்படி ஏதாவது இ ஆட்சியில் செய்தார்களா? இப்போது கட்டுமானப் பொருட்களின் விலைய உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம்.
அதிமுக ஆட்சியில் பொங்கல் அன்று பொங்கல் தொகுப்பு, 2500 ரூபாய் கொடுத்தோம். திமுக ஒழுகிற வெல்லம் கொடுத்தனர், திருவண்ணாமலையில் 2 டன் கெட்டுப்போன வெல்லம் வைத்திருந்தனர். திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அவற்றில் 98% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை 150நாளாக உயர்த்தவில்லை, ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை, கேஸ்மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மாணவர் கல்விக் கடன் ரத்து என்றெல்லாம் ஏராளமான திட்டங்களைச் சொல்லி, ஏமாற்றி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சியில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். நலன காக்கும் ஸ்டாலின் என்று இப்போதுதான் மக்களை பற்றி சிந்திக்கிறார். பெயர் வைப்பதில் தான் அவர் பிரபலம். பெயர் வைப்பதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார். அதுதான் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழு ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் அமைத்தோம். இப்படி அதிமுக ஆட்சியின் திட்டத்துக்குப் பெயர் மட்டும் மாற்றிவிடுகிறார்
அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அவர்களில் 2818பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். திமுக ஆட்சியில் வேட்டி, சேலை கொடுப்பதில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேட்டி, சேலை உரிய நேரத்தில் கொடுப்போம். தீபாவளி அன்று பெண்களுக்கு சேலை கொடுப்போம். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா பொருள் கொடுத்தோம், விலையில்லா உணவு கொடுத்தோம். மேலும் மாணவர்கள் நலன் கருதி ஆல்பாஸ் போட்டோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம்
அதிமுக ஆட்சியில் நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்கிறார் ஸ்டாலின் இந்த சாத்தூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதை மட்டும் சொல்கிறேன், சாத்தூரில் அதிநவீன மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம். கல்லூரி கட்டிடம், வைப்பாற்றில் தடுப்பணை, பாலம், குடிநீர் திட்டம், 520 கோடியில் விருதுநகர் சாத்தூர் அருப்புக்கோட்டை தாமிரபரணி நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம். இந்த நான்காண்டுகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம். சாத்தார் வைப்பாற்றில் சாக்கரை கலக்காத வண்ணம், 50 கோடி மதிப்பீட்டில் பாதா சாக்கடை திட்டம் கொண்டுவந்தோம். கோட்டாட்சியர் அலுவலகம், அதிநவ.... மின் விளக்குகள், தரமான சாலைகள், ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனி நீர்த்தேக்கம் அமைத்தோம்" என்று தெரிவித்தார்.
இப்போது நீங்கள் இருக்கன்குடி அணை, வெம்பக்கோட்டை அணை தூர் வாரவேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சியில் நிச்சயம் தூர்வாரப்படும். சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கேட்டுள்ளீர்கள். அதுவும் ஆட்சி அமைந்ததும் அமைக்கப்படும். ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். உங்கள் மற்ற கோரிக்கைகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ள மெளனம் சாதிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.
- காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள்.
பீகாரின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பாஜகவுகான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் பீகாரின் சீதாமர்ஹியில் இன்று நடந்த தேர்தல் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் ஷா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பீகார் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா இல்லையா? நமது அரசியலமைப்புச் சட்டம் இங்கு பிறக்காதவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்கவில்லை.
ராகுல் காந்தி அரசியலமைப்புச் சட்டத்துடன் சுற்றித் திரிகிறார். அவர் அதைத் திறந்து படிக்க வேண்டும். ஊடுருவல்காரர்கள் அவரது வாக்கு வங்கி என்பதால் அவர் SIR-ஐ எதிர்க்கிறார்.
ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலை நிறுத்த வேண்டும். இது ஒரு புதிய செயல்முறை அல்ல, உங்கள் தாத்தா ஜவஹர்லால் நேரு தான் இதைத் தொடங்கி வைத்தார்.
கடைசியாக அது 2003 இல் நடந்தது. இப்போது நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால், பீகாரில் உங்கள் தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட ஒரு காலம் இருந்தது. பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தி பாகிஸ்தானுக்கு ஓடிவிடுவார்கள். அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. மோடி ஜியின் அரசாங்கம் வந்தது, உரியில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்தோம்.
புல்வாமாவில் தாக்குதல் நடந்தபோது, நாங்கள் ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தினோம். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலளித்தோம்" என்று தெரிவித்தார்.
- எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் இபிஎஸ் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அச்சக உரிமையாளர்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள், மற்றும் வணிகர் சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளிநாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதியாகி அரசுக்கு வருமானம் வருகிறது ஒரு சிலர் பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த காரணத்தால்தான் இந்த பிரச்சினை வெடித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அரசாங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்படும் நிலை உள்ளது இந்த வழக்கு நடக்கும்போதே இதற்கு தீர்வுகாண அதிமுக ஆட்சியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி, நீதிமன்றத்தில் முத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைத்தோம்.
இருந்தாலும் தீபாவளி காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் மாசுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுநல வழக்கை போட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. நம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்படும் நிலைகளை எடுத்துச் சொல்லித்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.
அதிமுகவைப் பொறுத்த வரையில், எல்லா தொழிலுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் எடுத்துச் சொல்வோம். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் உங்கள் பிரச்னைகளை சொல்லி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் பட்டாசு தொழிலாளர்கள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசியில் 10 கோடி ரூபாயில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையிலும் இது தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், காமராஜ் கே டி ராஜேந்திரபாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவிடம் இருந்து யுரேனியம், பல்லேடியம் போன்ற முக்கிய பொருட்களை வாங்குகின்றன.
- இந்தியா ஒரு 'இறந்த பொருளாதாரம்' என்று நீங்கள் கூறினீர்கள்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது தெரிந்ததே.
இந்நிலையில் அதிபர் டிரம்ப்புக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. அசோக் குமார் மிட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்தியர்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்?. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்து எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவிடம் இருந்து யுரேனியம், பல்லேடியம் போன்ற முக்கிய பொருட்களை வாங்குகின்றன.
அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியா ஒரு 'இறந்த பொருளாதாரம்' என்று நீங்கள் கூறினீர்கள், ஆனால் எங்கள் பொருளாதாரம் உலகின் நான்காவது பெரிய மற்றும் வேகமாக வளரும் நாடாக உள்ளது. இரு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன" என்று தெரிவித்தார்.
மேலும், சுதேசி இயக்கத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்க நிறுவனங்களை இந்தியா கட்டுப்படுத்தினால் அமெரிக்காவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம், வற்புறுத்தல் வேண்டாம் என்று டிரம்ப்பை கேட்டுக்கொண்டார்.
- எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன்.
- உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
ரஷியாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்
இதற்கிடையே ரஷியா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் புதின் இந்தியா வர உள்ள தகவலை நேற்று உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று, ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், எனது நண்பர் அதிபர் புதினுடன் மிகவும் சிறப்பான மற்றும் விரிவான உரையாடலை நடத்தினேன்.
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். எங்கள் இருதரப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்.
மேலும் இந்தியா-ரஷியா சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.






