என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake ID"

    • பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    புதுடெல்லி:

    பீகாரின் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.

    கடந்த ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதற்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என தேஜஸ்வி யாதவ் ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிவித்தார். ஆனால் தேஜஸ்வி பெயர் பட்டியலில் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்தார். இருப்பினும் 2 அடையாள அட்டைகளை வழங்கியதாக ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், போலியான அரசாங்க ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்துவது குற்றம் என்றும், ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் போலியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேஜஸ்வி சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

    • வாசுதேவன் தன் மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி அதில் ஆபாசபடங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார்.
    • மனைவியின் சகோதரி பெயரிலும் போலியான கணக்கு தொடங்கி தவறான தகவல்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் வாசுதேவன் தன் மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி அதில் ஆபாசபடங்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார். அதேபோல் அவரது மனைவியின் சகோதரி பெயரிலும் போலியான கணக்கு தொடங்கி தவறான தகவல்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

    மேலும் வாசுதேவன் தனது மாமனாரிடம், அவரது 2 மகள்களும் பேஸ்புக்கில் ஆபாசமாக கருத்துக்கள் பதிவிடுவதாக அனைவருக்கும் கூறி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவி பெயரில் போலியான கணக்கு தொடங்கி ஆபாசபடம் மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்டதாக வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசாருக்கு தெரியப்படுத்தி, மேற்கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×