என் மலர்tooltip icon

    இந்தியா

    போலி வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வேண்டும்: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் கெடு
    X

    போலி வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வேண்டும்: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் கெடு

    • பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    புதுடெல்லி:

    பீகாரின் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.

    கடந்த ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது. இந்த செயல்முறை பா.ஜ.க.வுக்கான வாக்கு திருட்டு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதற்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என தேஜஸ்வி யாதவ் ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிவித்தார். ஆனால் தேஜஸ்வி பெயர் பட்டியலில் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்தார். இருப்பினும் 2 அடையாள அட்டைகளை வழங்கியதாக ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், போலியான அரசாங்க ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்துவது குற்றம் என்றும், ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் போலியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேஜஸ்வி சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

    Next Story
    ×