search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    மாரி-2 படத்தில் கலெக்டராக நடிக்கும் வரலட்சுமி
    X

    மாரி-2 படத்தில் கலெக்டராக நடிக்கும் வரலட்சுமி

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் `மாரி-2' படத்தில் நடிகை வரலட்சுமி கலெக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. #Maari2 #Dhanush #Varalakshmi
    தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. 

    சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



    பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush #Varalakshmi 

    Next Story
    ×