என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அமெரிக்கா செல்லும் விஜய் 62 படக்குழு - ருசீகர தகவல்
Byமாலை மலர்16 Feb 2018 7:25 AM GMT (Updated: 16 Feb 2018 7:25 AM GMT)
விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்க செல்லவிருக்கிறது. #Vijay #Vijay62
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இது அவரது 62-வது படம். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின.
இந்த படத்துக்கு முதல் முறையாக தெலுங்கு பட உலகின் பிரபல ரெட்டையர்கள் ராமன்-லட்சுமண் சண்டை காட்சியை அமைத்து வருகிறார்கள். கொல்கத்தாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அடுத்து படத்தின் முக்கிய காட்சிகள் அமெரிக்காவில் படமாக இருக்கின்றன. அங்கு எடுக்கப்படும் காட்சிகள் தான் படத்தின் மைய கரு என்று கூறப்படுகிறது. இதற்காக விஜய்-முருகதாஸ் படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்கிறார்கள்.
Next Story
×