என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஷாலுக்கு குரல் கொடுத்த தனுஷ்
Byமாலை மலர்29 Nov 2017 2:42 PM GMT (Updated: 29 Nov 2017 2:42 PM GMT)
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சண்டக் கோழி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இடம் பெறும் சிறப்பு பாடலை தனுஷ் பாடியுள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ல் வெளியான படம் ‘சண்டக்கோழி’. 12 வருடங்கள் கழித்து தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் லிங்குசாமியே இயக்கி வருகிறார். படத்தின் நாயகனாக விஷால் நடிக்கிறார். நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் அஜய், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் தனது விஷால் பிலிம்பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் கம்போசிங்கில் பிசியாக இருந்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தை போலவே ‘சண்டக்கோழி 2’ படத்திலும் பாடல்களை ஹிட்டாக்க வேண்டும் என்ற முனைப்பில் இசையமைத்து வருகிறார் யுவன். இதற்காக இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷை வைத்து பாட வைத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story
×