search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுவன் சங்கர் ராஜா"

    • அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது
    • இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார்

    அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    திரையரங்குகளில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது. வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்த் ரவி, இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

    தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
    • இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார்

    மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.

    விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

    மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.

    இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு "லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்" என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்
    • இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

    புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை
    • “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க

    பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தர்மதுரை, சலீம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் விநியோகஸ்தராக  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, தங்கமீன்கள் உள்ளிட்ட படங்களிலும், பாலாவின் தாரைதப்பட்டை, மருது, ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், காளி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

    இந்நிலையில் 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் 'லுக் போஸ்டர்'  வெளியாகி உள்ளது. இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த 'போஸ்டர்' சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இப்படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா கூறியதாவது:-

    ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை. இப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்நிலையில் 'எக்ஸ்' தளத்தில் ஆர்.கே. சுரேஷ் பதிலளித்துள்ளார். அதில் "யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்"என்று குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா பதிவை பார்த்து ஆர்.கே.சுரேஷை ரசிகர்கள் விமர்சித்தனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவால் மீண்டும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா தற்போது விஜயின் 'GOAT' படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது
    • ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

    இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

    சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், லிப்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான டாடா மாபெரும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது.

    இந்நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.

    இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

    • வெங்கட் பிரபு ‘தி கோட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, பத்திரிகையாளர்களை சந்தித்த இவர் 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என்று சிரித்தபடி சொன்னவர், பிறகு "இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், 'தி கோட்' திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது" என்றார்.

    • கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார்.
    • இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு தி. நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பவதாரணி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "பவதாரிணி மறைவு வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தேன்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
    • இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா Our hearts are with you in this time of sorrow" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானார்.
    • பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர்.

    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று காலமானார். கல்லீரல் புற்றுநோய் பாதிப்பினால் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


    பவதாரிணி மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சமூக வலைதளத்தில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாடகி பவதாரிணி உடல் இலங்கை, கொழும்புவில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் அவரது உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


    சென்னை, தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணி உடல் பொது மக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.
    • புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியீடு.

    தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது 98-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இதன் தலைப்பு, ரிலீஸ் மற்றும் இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    ×