இன்று மாலை வெளியாகும் 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிள்

இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இன்று மாலை வெளியாகும் 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிள்
Published on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com