என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
உதயநிதியை நிமிர வைத்த மோகன்லால்
Byமாலை மலர்4 Oct 2017 6:19 PM GMT (Updated: 4 Oct 2017 6:19 PM GMT)
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த இப்படத்திற்கு மலையாள நடிகர் மோகன்லால் படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்.
'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தை அடுத்து உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'இப்படை வெல்லும்'. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிவுள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.
இப்படத்தில் உதயநிதியுடன் இயக்குனர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படத்தின் தலைப்பை மலையாள நடிகர் மோகன்லால் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'நிமிர்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×