search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷாலை கிண்டலடித்த சேரன்
    X

    விஷாலை கிண்டலடித்த சேரன்

    துப்பறிவாளன் படத்தின் டிக்கெட் விலையில் ரூபாய் 1 வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்ததற்கு இயக்குனர் சேரன் கிண்டலடித்துள்ளார்.
    விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இப்படம் வெளியானதையொட்டி, திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்திருக்கிறார். மேலும் இரு தினங்களுக்கு முன்பு இணைய தளத்தில் புதிய படங்களை திருட்டு தனமாக வெளியிடும் ஒரு நபர் போலீசாரிடம் பிடிபட்டார். இது விஷாலின் முயற்சியால் பிடிபட்டார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், விஷாலின் இந்த செயலுக்கு இயக்குனர் சேரன் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சங்கம் கொடுத்துவந்த producers insuranceக்கு பணம் கட்டாம 120 பேருக்கு கேன்சல் செய்ய சொல்லிவிட்டு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் சூப்பர்ல... ஒரே stunt காட்சியா இருக்கே 1)தமிழ் சினிமாவே நான் வரலைன்னா அழிஞ்சிருக்கும் 2) தமிழ் ராக்கர்ஸ் பிடிச்சாச்சு 3) விவசாயிக்கு ஒரு ரூபாய்’ என்று கூறியிருக்கிறார்.
    Next Story
    ×