செய்திகள்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு - 11 பேர் பலி

Published On 2018-10-27 23:43 GMT   |   Update On 2018-10-28 00:44 GMT
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். #PittsburghShooting #US
வாஷிங்டன்:

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது.

வழிபாட்டுக்கு என அப்பகுதியில் மக்கள் கூடியிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து சரமாரியாக சுட துவங்கினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.



காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த மர்ம நபர், போலீசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிட்ஸ்பர்க் பகுதிக்கு சென்று பார்வையிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. #PittsburghShooting #US
Tags:    

Similar News