செய்திகள்

சீனாவில் மக்கள் கூட்டத்தில் கார் மோதி, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி

Published On 2018-09-12 18:49 GMT   |   Update On 2018-09-12 18:49 GMT
சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற கொடூர குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். #ChinaCarAttack
பீஜீங்:

சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார்.

இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChinaCarAttack
Tags:    

Similar News