இந்தியா

குஜராத்தில் சோகம்: கேளிக்கை அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலி

Published On 2024-05-25 15:43 GMT   |   Update On 2024-05-25 15:43 GMT
  • குஜராத்தில் கேளிக்கை கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் கேம்ஜோன் உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News