இந்தியா

வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி

Published On 2024-05-25 14:51 GMT   |   Update On 2024-05-25 14:51 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
  • வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

டெல்லி, அரியானா உள்பட 6 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப் பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2024 பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை சிறப்பாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அருகில் வராததால் அதற்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News