இந்தியா

மெஸ் உணவில் மிதந்த பாம்பு.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள் - அரசுக் கல்லூரியில் பரபரப்பு

Published On 2024-06-17 11:00 IST   |   Update On 2024-06-17 11:00:00 IST
  • விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
  • மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

 

Tags:    

Similar News