என் மலர்
நீங்கள் தேடியது "ECI"
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
லக்னோ:
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாராகி உள்ளது. வரும் 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்கள் இடம் பெறுகிறார்கள், 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1 கோடிக்கு அதிகமானோர் தேர்தல் ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட 12 ஆவணங்களைக் காட்டி பெயர் சேர்க்க முறையிட தகுதியானவர்கள்.
ஜனவரி 1 முதல் அவர்கள் இதுகுறித்து முறையிட படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
- வாக்காளர் பட்டியலில் சந்தேகம் உள்ளவர்களை நேரில் வந்து ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
- முகாம்களுக்கு முதியோர்கள் வர சிரமமாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரோடு இருப்பவர்கள் பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் முகாம்களுக்கு செல்வதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பார்தா பவ்மிக் கூறியதாவது:-
இது சித்ரவதைக்கு சற்றும் குறைவானது அல்ல. தேர்தல் நேரத்தின்போது வயதானவர்கள் வாக்களிக்க வர முடியாது என்பதால், அதிகாரிகளை வாக்குப்பதிவிற்கான வீடுகளுக்கு அனுப்புகிறது. அதே நடைமுறையை இதற்கு ஏன் பயன்படுத்தவில்லை?.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சஷி பஞ்சா "வயது மூத்த நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்ப்ட நாள், நேரத்தில் முகாமுக்கு செல்ல மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறனர். 85 வயது போன்றவர்களை அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆவணங்கள் குறித்து விசாரிகக் தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
- SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைவு.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீக்கப்பட்டவர்களில் வங்காளதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் எவ்வளவு பேர் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தின் மக்கள் தொகை 10.05 கோடியாகும். இதில் SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் வெறும் 5.79 சதவீதம்தான். SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைந்த சதவீதம். நீக்கப்பட்ட 58.20 லட்சம் வாக்காளர்களில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 2,54,42,352 வாக்காளர்கள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
நீக்கப்பட்ட 22 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,49,885 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 14,61,769, இரட்டை பதிவுகள்: 1,36,029 என தெரியவந்துள்ளது.
இதேபோல், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். விநியோகம் யெ்யப்பட்டதில் 1,84,95,920 விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
நீக்கப்பட்ட 27 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,42,234 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 1,79,043 பேர், இரட்டை பதிவுகள்: 1,79,043 என தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிக அளவாக 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த 5,31,31,983 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 42,74,160 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்டவர்களில் இடம்மாறியவர்கள்: 31.51 லட்சம், இறந்தவர்கள்: 8.46 லட்சம், இரட்டை பதிவுகள்: 2.77 லட்சம் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ம.பி.யில் 42 லட்சம், கேரளாவில் 22 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம் என 3 மாநிலங்களில் சேர்த்து 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
- இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.
அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.
- தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை SIR பணி நடைபெறும்.
- கள ஆய்வு மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகிறார்கள்.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2026-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் மற்றும் தேவன்ஷ் திவாரி ஆகியோர் நவம்பர் 24 முதல் 26-ந்தேதி வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள். கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார்.
இதேபோல், மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார்.
இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
- இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 12 மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும்போது அசாம் மாநிலத்திற்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
- தற்போது அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் வாக்காளர்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் ஏன் SIR பணி மேற்கொள்ள உத்தரவிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்தம் (Special Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வீடு வீடாக சென்று நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும். டிசம்பர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
- தற்போதைய SIR பணி சுதந்திரத்திற்குப் பிறகு 9ஆவது நடவடிக்கையாகும்.
- 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதுபோன்ற பணி நடந்துள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின் இந்தியா முழுவதும் SIR பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த வரும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, SIR குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நாளை (இன்று) செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 12 மாநிலங்களில் 2ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.
- வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
- பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பணியின்போது வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குச்சாவடி -நிலை அதிகாரிகளுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப உதவுவார்கள், தேவைப்பட்டால் மாற்றாகவும் பணியமர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- அவரது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கரூரில் கடந்த மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாதது, த.வெ.க. கேட்ட இடம் கொடுக்காததுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் சம்பவம் இந்தியாவைவே உலுக்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.






