இந்தியா

6ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு- 5 மணி வரை 57.70% வாக்குப்பதிவு

Published On 2024-05-25 12:46 GMT   |   Update On 2024-05-25 12:46 GMT
  • 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
  • மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநிலம் வாரியாக பீகார் - 52.24 சதவீதம், டெல்லி - 53.73 சதவீதம், அரியானா - 55.93 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 51.35 சதவீதம், ஜார்க்கண்ட் - 61.41 சதவீதம், ஒடிசா - 59.60 சதவீதம், உத்தர பிரதேசம் - 52.02 சதவீதம், மேற்கு வங்கம் - 77.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதைதொடர்ந்து, 6ம் கட்ட தேர்தலுக்கான இன்றைய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியளவில் நிறைவுப் பெற்றது.

Tags:    

Similar News