இந்தியா

''விஷத்தைக் கண்டால் விலகி இருக்கச் சொல்கிறேன்... ஆனால் பிரதமர் மோடி" - கார்கே ஆதங்கம்

Published On 2024-05-25 12:23 GMT   |   Update On 2024-05-25 12:23 GMT
  • பிரதமர் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.
  • உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை என்றார் கார்கே.

பெங்களூரு:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கல்புர்கியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மா கங்கா என அழைக்கப்படும் 2047-ம் ஆண்டுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தயாரித்துள்ளார். 2047 வரை அவர் இருப்பாரா?

அவர் சில சமயங்களில் கடலுக்குள் செல்வார். சில சமயம் கங்கையின் உள்ளே செல்கிறார். சில சமயம் குகைகளுக்குச் செல்கிறார். சில சமயம் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். அவரது தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.

உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை. நல்ல காரியங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கெட்ட காரியங்களைச் செய்தால் கெட்ட பலன்தான் கிடைக்கும்.

விஷத்தைக் கண்டு அதிலிருந்து விலகி இருக்கச் சொன்னாலும் அதை நக்க பிடிவாதம் பிடித்தால் என்ன பலன்? மோடியும் அப்படித்தான் என தெரிவித்தார்.

Tags:    

Similar News