இந்தியா

காற்று சுத்திகரிப்பானுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2025-12-24 18:58 IST   |   Update On 2025-12-24 18:58:00 IST
  • டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
  • காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News