ரூ.100 மதிப்புள்ள கோதுமையை திருடிய நபரை 45 ஆண்டுகள் கழித்து கைது செய்த ம.பி. போலீஸ்!

அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.
ரூ.100 மதிப்புள்ள கோதுமையை திருடிய நபரை 45 ஆண்டுகள் கழித்து கைது செய்த ம.பி. போலீஸ்!
Published on

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.

கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.

கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.

தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com