இந்தியா

மேற்கு வங்கத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இல்லை: சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு

Published On 2025-12-24 18:05 IST   |   Update On 2025-12-24 18:05:00 IST
  • மேற்கு வங்க மாநிலத்தில் சாமி சிலைகள் போலீஸ் உதவியுடன் சிறைச்சாலை வேன்களில் ஏற்றி செல்லப்பட்டன.
  • இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றச்சாட்டு.

மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் சனாதன தர்மம் பாதுகாப்பனது அல்ல எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

தெற்கு 24 பர்கானசில் உள்ள சாகர் ஐலேண்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு சுவேந்து அதிகாரி பேசியதாவது:-

சாமி சிலைகள் சிறைச்சாலை வேன்களில் போலீஸ் உதவியுடன் ஏற்றப்பட்டன. ஆனால் ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் சனாதன தர்மம் மற்றும் இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல என்பதற்கு வழிவகுத்துள்ளன.

காவல்துறையினர் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு விளைவுகளை சந்திக்க நேரிம்.

இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

சாகர் ஐலேண்டில் பேரணி நடத்த சுவேந்து அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் அவரது பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News