செய்திகள்

அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-02-17 10:43 GMT   |   Update On 2018-02-17 10:43 GMT
அமெரிக்க வீரர்களை கொன்று நைஜீரியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு தந்த அல் கொய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. #alqaeda #Lifesentence
வாஷிங்டன்:

சவுதி அரேபியா நாட்டில் பிறந்த இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆடம் ஹாருன் என்பவன் கடந்த 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று ஒசாமா பின் லேடன் தலைமையிலான தீவிரவாத பயிற்சி கூடங்களில் பயிற்சி பெற்றான்.

பின்னர், தன்னுடன் மேலும் சில தீவிரவாதிகளை சேர்த்துகொண்டு பாகிஸ்தான் நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியை வந்தடைந்தான்.

கடந்த 25-4-2003 அன்று அங்குள்ள எல்லைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் மீது இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆடம் ஹாருன் மற்றும் அவனது கூட்டாளிகள் சிலர் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அமெரிக்க வீரர்கள் இருவர் பலியாகினர்.

பின்னர், நைஜீரியா நாட்டின் அபுஜா நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பு இவனிடம் ஒப்படைக்கப்பட்டது. தாக்குதல் நடத்துவதற்காக கூட்டாளிகளை சேர்த்துகொண்டு, தேவையான வெடிப்பொருட்களை இவனது கூட்டாளி பாகிஸ்தானில் கைதானான்.

அவன் அளித்த தகவலின் அடிப்படையில் நைஜீரியா நாட்டின் பாதுகாப்பு படையினர் இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆடம் ஹாருனை தேடியபோது, அங்கிருந்து லிபியாவுக்கு தப்பிச் சென்றான். அங்கிருந்தவாறு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய திட்டமிட்டிருந்த அவனை லிபியா படையினர் கடந்த 2005-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் சிறையில் இருந்து விடுதலையான அவனை இத்தாலி போலீசார் கைது செய்து லிபியாவில் இருந்து அழைத்துவந்து 2012-ம் ஆண்டு அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர்.

பல்வேறு போலி பெயர்களில் அல் கொய்தா இயக்கத்தின் முக்கிய தீவிவராதியாக இருந்த இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆடம் ஹாருன் மீது அமெரிக்க தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தகுந்த சாட்சிகளுடன் அமெரிக்க அரசுதரப்பு வக்கீல் திறமையாக வாதாடியதால் 16-3-2017 இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆடம் ஹாருனை குற்றவாளி என்று அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. #tamilnews #alqaeda #Lifesentence
Tags:    

Similar News