search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terror"

    • டலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி.
    • இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நூருல்லா சாகித் (வயது 35). சம்சா வியாபாரி. இவரும் இவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோர் இணைந்து சம்சா போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இரண்டு பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தீன் ஆகியோரை சரமாரியாக கத்தியால் வெட்டினார்கள். இதில் இரண்டு பேரும் கதறி துடித்தனர். இந்த சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவத்திற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும் இருந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது நூருல்லா சாகித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார் மேலும் இவரது தந்தை முகமது மொய்தீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இத் தகவல் இருந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 

    இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட நூருல்லா சாகித்துக்கும் , அவரது குடும்ப உறவினருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று இரவு 2பேர் நூருல்லா சாகித் மற்றும் அவரது தந்தை முகமது மொய்தினை சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். . கடலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக சம்சா வியாபாரியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
    • இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 40). இவர்களது மகன் மணிகண்டன்.  மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்து வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தாரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விடுவதாக கோமதியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்த போதும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோமதியின் தந்தை முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. #PulwamaAttack
    ஆமதாபாத்:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ரஷித் என்ற கம்ரன் நேற்று காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதி கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது.

    அதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக சர்தார் சரோவர் அணைக்கட்டு, சோம நாத் ஆலயம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண உடைகளில் போலீசாரின் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குஜராத் முதல்-மந்திரி விஜய்ரூபானி நேற்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர். #PulwamaAttack
    ×