என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் அணைத்த போது எடுத்தபடம்.
பண்ருட்டி அருகே மகளின் காதலன் வீட்டை தீ வைத்து கொளுத்திய தந்தை: நள்ளிரவில் பயங்கரம்
- மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
- இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 40). இவர்களது மகன் மணிகண்டன். மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்து வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தாரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விடுவதாக கோமதியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்த போதும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.
இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோமதியின் தந்தை முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






