செய்திகள்

சவூதி மன்னர் இல்லத்தை குறிவைத்து ஏவுகணை வீச்சு: ஈரானின் செயல் என்கிறது அமெரிக்கா

Published On 2017-12-20 12:32 GMT   |   Update On 2017-12-20 12:32 GMT
சவூதி அரேபிய மன்னர் இல்லத்தை குறிவைத்து ஏமன் ஹவுத்தி போராளிகள் ஏவிய ஏவுகணை ஈரானில் வடிவமைக்கப்பட்டது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க்:

உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் ஏமனில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுத்தி போராளிக்குழுவுக்கு ஆதரவாக ஈரானும் களமிறங்கி சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் சவூதி அரேபிய மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல் யாமாமா அரண்மனையை குறித்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஏமனிலிருந்து நடத்தப்பட்டது.

ஹவுத்தி போராளிகள் இந்த ஏவுகணையை ஏவியதாகவும், அதனை சவுதி அரேபியா இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

இந்நிலையில், சவூதியை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணையில் ஈரானின் சின்னம் இருந்ததாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து கூறிய அவர் , ஈரானின் குற்றங்களை அம்பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அவ்வாறு இல்லையெனில் ஒரு மோசமான பிராந்திய மோதலுக்கு ஈரான் வித்திடும் என்றார். ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.
Tags:    

Similar News