செய்திகள்

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்

Published On 2017-10-21 00:10 GMT   |   Update On 2017-10-21 03:35 GMT
ஆப்கானிஸ்தானில் மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
காபுல்:

வடமேற்கு ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்திற்கு உட்பட்ட தாவ்லினா மாவட்டத்தில் உள்ள மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.

இதேபோல், காபுலில் உள்ள மசூதியிலும் தற்கொலைப்படை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நவ்ரட் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும். அங்கு அமைதி நிலவவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் தேவையான உதவிகளை செய்யும் என கூறினார். 
Tags:    

Similar News