search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைப்படை தாக்குதல்"

    • ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தாக்குதல் நடந்தது.
    • இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுக்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.

    அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப் படையினர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
    • இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெளியுறவுத்துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அமைச்சகரகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வெளியேறும்போது அலுவலக வாசலில், இருந்த தற்கொலை படை பயங்கரவாதி கெய்பர் அல் காந்தகாரி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஆளும் தலிபான் அதிகாரிகள் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலிவாங்கிய மற்றும் பலரை காயப்படுத்திய காபூலில் நேற்றைய பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது.
    • இந்தத் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சக அலுவலக வளாகத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

    இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியிருக்கலாம். பலர் காயமடைந்துள்ளனர் எனவும், இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஆனால், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • இந்தோனேசியா பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களுடன் போராடி வருகிறது.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜகார்த்தா :

    இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் தலைநகர் பாண்டுங்கில் அஸ்தானா அன்யார் என்கிற இடத்தில் போலீஸ் நிலையம் ஒன்று உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தார்.

    கையில் கத்தியுடன் வந்திருந்த அந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

    வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதியும், போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 7 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்கள் 8 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2002-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர்.

    இந்த தாக்குதலுக்கு பின் இந்தோனேசியா தொடர்ந்து பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களுடன் போராடி வருகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுலவேசி மாகாணத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தின்போது ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 பேர் பலியானதும், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
    • நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.

    புதுடெல்லி :

    ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.

    அதேவேளை, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடபாக 6-ம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்கள் முடிவுக்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் உள்ள பள்ளி வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kabul #Afghan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பலியான அனைவருக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். #IndonesiaChurchAttack
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.



    இந்த தாக்குதலில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார்? என்பது தொடர்பான விசாரணையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. 
    ×