செய்திகள்

ஜப்பானில் நடுவானில் பறந்த விமானத்தில் இறக்கை உடைந்து விழுந்து கார் நொறுங்கியது

Published On 2017-09-25 06:39 GMT   |   Update On 2017-09-25 07:13 GMT
ஜப்பானில் ஒசாகா நகரம் மீது பறந்து கொண்டிருந்த விமானத்தின் இறக்கை பகுதி 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததில் ஒரு கார் அப்பளம் போல் நொறுங்கியது.
டோக்கியோ:

நெதர்லாந்தை சேர்ந்த கே.எல்.எம். ராயல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் தலைநகர் ஆம்ஸ் டர்டாமுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 300 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானம் ஜப்பானில் ஒசாகா நகரம் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இறக்கை பகுதி உடைந்து விழுந்தது. 4 கிலோ எடையுள்ள இறக்கை பகுதி 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தது.

அது ஒசாகாநகரில் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது ‘டமார்‘ என விழுந்தது. இந்த விபத்தில் காரின் கூரை அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணாடிகளும் சிதறின. கார் படுசேதம் அடைந்தது.

இறக்கை உடைந்து சேதம் அடைந்த விமானம் ஆம்ஸ்டர் டாமில் பத்திரமாக தரை இறங்கியது. ஆனால் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News