செய்திகள்
அமைச்சர் தங்கமணி

கொளத்தூர் பகுதியில் மின்நிலையம் அமைக்கும் பணி விரைவில் முடியும்- ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

Published On 2020-01-07 06:58 GMT   |   Update On 2020-01-07 06:58 GMT
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்வி வருமாறு:-

கொளத்தூர் பகுதியில் உள்ள நேர்மை நகரில் 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 2019-க்குள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி முடிவடையவில்லை.

இதுபோல் கொளத்தூர் கணேஷ் நகரில் 230 கிலோவாட் திறன் கொண்ட மின்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதுகுறித்து சட்டசபையில் 3 முறை கேள்வி கேட்டேன். நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இந்த நிலையம் அமைந்தால் கொளத்தூர் பகுதியில் உள்ள 40 இடங்கள் பயன்பெறும். எனவே இதை உடனே நிறைவேற்றி தரவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பணி எப்போது நிறைவடையும்?

இதற்கு அமைச்சர் தங்கமணி அளித்த பதில் வருமாறு:-

கொளத்தூர் நேர்மை நகரில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி இன்னும் 10 நாட்களில் தொடங்கும். ஒரு மாதத்தில் நிறைவடையும்.

கணேஷ் நகரில் மின்நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து மின்நிலையம் அமைக்கப்படும். 6 மாதத்தில் இந்த பணி நிறைவடையும். விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News