இந்தியா

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 9 மணி நிலவரப்படி திரிபுராவில் 16.65 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-04-26 05:09 GMT   |   Update On 2024-04-26 07:41 GMT
  • காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்
  • ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

மணிப்பூர்:

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 9 மணி நிலவரப்படி அசாமில் 9.71%, பீகாரில் 9.84%, சத்தீஸ்கரில் 15.42%, ஜம்மு காஷ்மீர் - 10.39%, கர்நாடகா - 9.21%, கேரளா - 11.98%, மத்தியப்பிரதேசம்-13.82%, மகாராஷ்டிரா -7.4%, மணிப்பூர் - 15.49%, ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 13% வாக்குகள் பதிவாகி உள்ளது.


Similar News