செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் மூலம் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும்- ரங்கசாமி பேச்சு

Published On 2019-03-10 16:40 GMT   |   Update On 2019-03-10 16:40 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ரங்கசாமி பேசியுள்ளார். #rangasamy #anbalagan
புதுச்சேரி:

அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை ரங்கசாமி சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க .தலைமை அலுவலகத்திற்கு ரங்கசாமி இன்று காலை வந்தார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். 

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவையில் அ.தி.மு.க. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் அமைந்திருக்க வேண்டும். தகவல் தொடர்பில் சிறிய இடைவெளி ஏற்பட்டதால்தான்  ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 

பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாம் கூடுதலான ஓட்டுக்களை பெறவேண்டும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த சந்திப்பின்போது என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #rangasamy #anbalagan
Tags:    

Similar News