செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்- ஜெயக்குமார் வேண்டுகோள்

Published On 2019-01-22 10:44 GMT   |   Update On 2019-01-22 10:44 GMT
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்தினை கை விட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். #MinisterJayakumar #JactoGeo
சென்னை:

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம், கடலோர மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச உவர்நீர் மீன் மாநாடு, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மத்திய உவர்நீர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், கடலோர மாநிலங்களைச் சேர்ந்த 750 விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், தற்போது நடந்து வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டங்கள் குறித்து பேசியதாவது:-

அரசின் நிதி நிலைமைகளைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஸ்ரீதர் மற்றும் சித்திக் தலைமையிலான குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு ரூ.14000 கோடி தக்க நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உரிய நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எனவே அனைத்து ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கையில் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். #MinisterJayakumar #JactoGeo
Tags:    

Similar News