செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஜிகேவாசன் தலைமையில் 14ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-11 06:36 GMT   |   Update On 2018-09-11 06:36 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோதப் போக்கை கைவிட வலியுறுத்தியும் த.மா.கா. சார்பில் வருகிற 14-ந் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #PetrolPriceHike #GKVasan
சென்னை:

த.மா.கா. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை அடைந்திருக்கிறது. நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சாமானிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

அகில இந்திய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நேற்று நடத்திய பாரத் பந்த்திற்கு த.மா.கா. ஆதரவு அளித்தது. இதனை மத்திய பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் த.மா.கா. ஏற்கனவே அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோதப் போக்கை கைவிட வலியுறுத்தியும் த.மா.கா. சார்பில் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தலைமை தாங்குகிறார். முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PetrolPriceHike #GKVasan
Tags:    

Similar News