search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் டீசல் விலை உயர்வு"

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் லிட்டருக்கு ரூ.1 குறைத்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #MamataBanerjee
    கொல்கத்தா:

    நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சாமானியர்களின் கழுத்தை நெறிக்கும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. 

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறும் நிலையில் அரசு உள்ளது.

    பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மாநில அரசுகள் தங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் இதனை ஏற்க மறுக்கிறது. மேலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, இன்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலையில் ரூ.1 குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
    வேறுபாடுகளை ஒதுக்கி மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். #BharathBandh #ManmohanSingh
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்:-

    மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

    மாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் குரலை உணர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும்.

    என கூறினார். 
    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், ஆந்திராவில் அதன் மீதான விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #ChandraBabuNaidu
    அமராவதி:

    நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சாமானியர்களின் கழுத்தை நெறிக்கும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. 

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறும் நிலையில் அரசு உள்ளது.



    பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மாநில அரசுகள் தங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் இதனை ஏற்க மறுக்கிறது. மேலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாகவும், நாளை காலை முதல் புதிய விலை அமலாகும் எனவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்துள்ளார். மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு வசூலிக்கும் வரியை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ஆந்திராவில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். #RahulGandhi #PMModi #FuelChallenge
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட விலையேற்றம், தேர்தல் முடிந்ததும் தினமும் ஏறி வருகிறது. திடீர் திருப்பமாக இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைந்தது.

    ரூபாய் கணக்கில் தினமும் விலை ஏறி, ஒரு பைசா மட்டுமே குறைந்துள்ளதை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டி #FuelChallenge என்ற சவாலை அளித்திருந்தார். இந்நிலையில், இன்றும் இதே போல, பெட்ரோல் விலை ஒரு பைசா குறைவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

    அன்புள்ள பிரதமருக்கு,

    இன்று பெட்ரோல், டீசல் விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள். ஒரு பைசா?

    இது தான் உங்களது குறும்பு யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது மற்றும் மோசமான ரசணை கொண்டது.

    பின்குறிப்பு:- ஒரு பைசா விலை குறைப்பு என்பது நான் கடந்த வாரம் விடுத்த சவாலுக்கு சரியான எதிர்வினை அல்ல

    இவ்வாறு ராகுல் காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார். 
    ×